அவகடோ பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டு புரதம் நிறைந்துள்ளது. இது எலும்பு மூட்டுகளைப் பலப்படுத்துகிறது.
இதில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஹார்மோன்களின் சமநிலையையும் பராமரிக்கிறது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
எனவே, நீங்களும் இந்த பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகளை சிறந்த முறையில் அனுபவிக்க விரும்பினால், அதை உரித்து சரியாக வெட்டுவதற்கான கலையை முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.
பழுத்த அவகடோ பழத்தை எப்படி வெட்டுவது என்று செஃப் குணால் கபூரின் சில டிப்ஸ் இதோ. அவகடோ பழத்தை வெட்டுவதற்கு ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்.
https://www.instagram.com/p/CmF8jlQsNWL/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
பழுத்த அவகடோ பழத்தை எடுத்து, வீடியோவில் காட்டியபடி விதையைச் சுற்றி நீளவாக்கில் வெட்டவும். இப்போது இரண்டு கைகளையும் பயன்படுத்தி, பழத்தை மெதுவாக முறுக்கி இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். விதையை உங்கள் விரல் நுனியில் மெதுவாக இழுத்து வெளியே எடுக்கவும்.
வெட்டிய அவகடோ பழத்தை மீண்டும் நீளவாக்கில் சிறிய துண்டுகளாக வெட்டி தோலை எளிதாக உரிக்கலாம் அல்லது வீடியோவில் காட்டியபடி ஸ்பூனைக் கொண்டு சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கலாம்.
டிப்ஸ்
நீங்கள் அவகடோ பழத்தை மசித்து ஃபிரிட்ஜில் சேமிக்க நினைத்தால், பழம் பழுப்பு நிறமாக மாறாமல் இருக்க விதையை அதனுடன் சேர்த்து வைக்கவும்.
வெட்டியவுடன், பழத்தின் மீது சிறிது எலுமிச்சை சாற்றை உடனடியாக பிழிந்து விடவும். இல்லையெனில் அதில் ஆக்ஸிஜனேற்றம் தொடங்கி நிறம் மாறும் என கபூர் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“