வீட்டில் சுவையான அவகாடோ ஐஸ் கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவகாடோ – 2
ஹெவி கிரீம் – ஒன்றரை கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஹெவி கிரீம் தயாரிக்க அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து வெண்ணெயை சேர்க்கவும் உருகி வந்ததும்
பால் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் இப்போது கிரீம் ரெசி. இதை ப்ரிஜில் வைக்கலாம். அடுத்ததாக மற்றொரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து பால் ஊற்றவும். பாலாடைகளை எடுத்து விடவும். இந்த பாலாடைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கினால் மற்றொரு ஹெவி கிரீம் தயார்
இப்போது அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டன்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்க வேண்டும். அடுத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சத்தான அவகாடோ ஐஸ்கிரீம் ரெடி. தகிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு அவகாடோ ஐஸ்கிரீம் வீட்டில் இப்படி செய்து சாப்பிடுங்க.