Advertisment

ஆர்த்ரைடிஸ் உள்ளவங்க இந்த உணவுகளை மட்டும் தொடாதீங்க

ஆர்த்ரைடிஸ் வலி உள்ளவர்கள் நிச்சயம் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்காவிட்டால் வீக்கம், வலி மிகவும் அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
இந்த உணவுகளை மட்டும் தொடாதீங்க

இந்த உணவுகளை மட்டும் தொடாதீங்க

ஆர்த்ரைடிஸ் வலி உள்ளவர்கள் நிச்சயம் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்காவிட்டால் வீக்கம்,  வலி மிகவும் அதிகரிக்கும்.

Advertisment

அதிக சோடியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள கூடாது. இதுபோல அதிக ரத்த அழுத்தம் ஆர்த்ரைடிஸ் வலியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதிக சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ள உணவுகள் வீக்கத்தை அதிகரிக்கும். ஆர்த்ரைடிஸில் உள்ள மற்ற அறிகுறிகளை மற்றும் நோய்யின் தன்மையை அதிகரிக்கும்.

இனிப்பு வகைகளான கேண்டி சாக்லேட், ஐஸ் கிரீம் மற்றும் மற்ற இனிப்பு வகைகள், சாஸ் இதில் உள்ள சர்க்கரையில் எந்த பயன் தரும் சத்துக்கள் இல்லை என்பதால் இது வீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

துரித உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள். இதில் அதிக கொழுப்பு சத்து, சர்க்கரை, உப்பு உள்ளது, இது ஆர்த்ரைடிஸ் வலியை அதிகப்படுத்தும்.

இந்நிலையில் சூரிய காந்தி எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது நோய்யின் தன்மையை அதிகரிக்கும். மேலும் வலியை அதிகரிக்கும்.

ஆர்த்ரைடிஸ் வலி இருந்தால், மதுவை நாம் எடுத்துகொள்ள கூடாது. இதுபோல செயற்கையான ஸ்வீட்னர்களை எடுத்துகொள்ள வேண்டாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment