ஆயுத பூஜை, விஜய தசமி கொண்டாட்டம் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையாகவும், பத்தாவது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது

By: Updated: October 7, 2019, 07:22:05 AM

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையாகவும், பத்தாவது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த திருநாட்களை தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவது வழக்கம்.

இந்த திருநாட்களை முன்னிட்டு, பல தலைவர்கள் தங்கள் சார்பாக வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர். சில முக்கிய ட்வீட்களை இங்கே பார்ப்போம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி :

உலகம் முழுவதும், முழு புத்துணர்வோடு துர்கா பூஜா நடைபெறுகிறது. சமூகத்தின் நல்வாழ்வுக்காக இந்நாளை பிராத்திப்போம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்:

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடும் தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

உன்னதமான  உழைப்பையும், அழிவு இல்லாத கல்வியையும் பறைசாற்றும் விதமாக கொண்டாடும் ‘ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி’ க்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகளை  அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்,  என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

எல்லா மக்களின் வாழ்வில் நலமும் , வளமும் பெற்று வாழ சிறப்புமிக்க இந்த “ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” திருநாளில் வாழ்த்துவதாக  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

அமமுக கழக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்:

உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்னும் நன்நம்பிக்கையோடு, தமிழக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற்றிட ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியில்  வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Ayudha puja vijayadashami 2019 tamilnadu festivity political party leaders wishes ayudha puja vijayadhasami tweets

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X