ayurveda cooking : ஆரோக்கியமான உடல் நலம் கொண்டு சிறந்தவாழ்க்கையை ஆயுர்வேதம் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இயற்கை உணவுகளை சாப்பிட்டால் நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
ஆயுர்வேத உணவில் உள்ள நன்மைகள் :
1.ஊட்டம் நிறைந்த உணவு இயற்கையான உணவை உண்ண வேண்டும். ஏனெனில் அதில்தான் அதிக ஊட்டச்சத்து உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட மொத்த தானியங்கள், முழு பழங்கள் மற்றும் பருவகால காய்கறிகள் நிறைய
உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை காக்கும்.
2. சீரான உணவு :
ஆயுர்வேத அறுசுவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றை எல்லா உணவிலும் சேர்க்க வேண்டும். இது குப்பிகள் உணவை சம நிலையில் வைத்திருக்கும்
3. பழம் மற்றும் காய்கறிகள்:
உணவை காய் பழங்களால் அலங்கரியுங்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஊட்டச்சத்து
நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
4. மசாலாக்கள்:
தமிழர் பாரம்பரியத்தில் மசாலாக்கள் நம் உணவில் இப்பேதும் இருக்கிறது. இது
சுவைக்காக மட்டுமின்றி உடல் நலத்திற்காகவும் தான். ஜீரண சக்தியை அதிகரித்து, சத்துகளை
உடலில் எளிமையாக சேர்க்கும்.
5. சுத்தம் செய்யும் :நாம் தமது உடலை உள்ளேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஜீரணசக்தியை குறைக்கும் செயலை செய்யக்கூடாது. தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து உணவு
உட்கொள்ள கூடாது. பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கான நேரத்தை நம்
உடல் தானாகவே பொருத்திக்கொள்ளும். அந்த நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பொறுமையாக அரைத்து சாப்பிட வேண்டும்.
6. தண்ணீர் :
நமது உடலை எப்பொழுதும் நீர் சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நீர் சத்து குறையும்
போது சர்மம் பாழாகும். மிக குளிர்ந்த நீரை தவிர்த்த சாதாரண நீரை அருந்த வேண்டும். ஆயுர்வேதமானது தொட்டு, பார்வை, சுவை மற்றும் வாசனை போன்ற நம் 5 உணர்ச்சிகளோடு வளர்சிதை மாற்றத்தைக் கூறுகிறது. நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும்
நம்மில் ஒரு பகுதிதான். நன்மையான வாழ்விற்கு சிறந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க
வேண்டும்.