தினமும் தயிர் சாப்பிடலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது.
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது.
Ayurveda recommends against consuming curd on a daily basis
தற்போது கோடைக்காலம் நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பதால், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உணவுமுறையை மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறிய உணவு மாற்றங்கள்’ உடல் மாறிவரும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை சமாளிக்க உதவும்.
Advertisment
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது.
தயிர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, வலுவான எலும்புகளை உருவாக்குகிறது, சருமத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
ஆயுர்வேதமும், தயிரை மிகவும் அங்கீகரிக்கிறது, ஆனால் எவ்வளவு தயிர் உடலுக்கு நல்லது அதே போல் எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் எச்சரிக்கிறது.
Advertisment
Advertisements
ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்சர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ‘ஆயுர்வேதத்தில் தயிர் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
புளிப்பு சுவையுடைய தயிர், இயற்கையில் சூடானது, ஜீரணிக்க கடினமானது.
எடை அதிகரிப்புக்கு தயிர் நல்லது, ஏனெனில் இது கொழுப்பை அதிகரிக்கிறது, வலிமையை அதிகரிக்கிறது. மேலும் வாதத்தை குறைத்து’ கபம் மற்றும் பித்தத்தை அதிகரிக்கிறது. செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
மருத்துவர்’ தயிர் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை" பகிர்ந்து கொண்டார், அதே நேரத்தில் தினமும் மதிய வேளைகளில் தயிர் சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
*தயிரை சூடாக்கக்கூடாது. வெப்பம் காரணமாக அதன் பண்புகளை இழக்கிறது.
*தினமும் தயிர் சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக, கல் உப்பு, கருப்பு மிளகு மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்த மோர்’ வழக்கமான அடிப்படையில் உட்கொள்ளலாம்.
*உங்கள் தயிரை பழங்களுடன் கலக்காதீர்கள், ஏனெனில் இரண்டும் பொருந்தாத உணவாகும். நீண்டநாள் இப்படி உட்கொள்வது வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமைகளைத் தூண்டும்.
* தயிர் இறைச்சி மற்றும் மீனுக்கு பொருந்தாது. கோழி, ஆட்டிறைச்சி அல்லது மீன் போன்ற இறைச்சிகளுடன் சேர்த்து சமைத்த தயிர் கலவையானது உடலில் நச்சுகளை உருவாக்கும்.
"நீங்கள் தயிர் சாப்பிட விரும்பினால், எப்போதாவது, மதியம் மிதமாக சாப்பிடுங்கள்" என்று கூறி மருத்துவர் முடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“