Advertisment

வெல்லம், பூண்டு: குளிர் காலத்தில் இதயக் கோளாறுகளைத் தடுக்க சிறந்த ஆயுர்வேதத் தீர்வு

எவ்வாறாயினும், இந்த கலவையானது இயற்கையில் வெப்பத்தை உருவாக்கும் என்பதால், கோடையில் இதை ஒருவர் தவிர்க்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Heart health

Ayurveda remedy for heart problems in winter

குளிர் காலத்தில் இதயப் பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாகி விடுகின்றன, எனவே ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் வெளிப்படையான அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

Advertisment

நிபுணர்களின் கூற்றுப்படி, வானிலை தொடர்பான மாரடைப்புக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கும் விதம்.

உடலின் உயிரியல் நிலை சிம்பெதெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் தடைபடுகிறது, இது நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருக்குகிறது. இது வாசோகன்ஸ்டிரிக்ஷன்எனப்படும். இந்தச் செயல்பாட்டின் போது, ​​உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தை அழுத்துவதால், ரத்த அழுத்த அளவு அதிகரிக்கிறது, என்று புதுதில்லி டாக்டர் பல்பீர் சிங் தெரிவித்தார்.

ஆனால் ஆயுர்வேத டாக்டர் மிஹிர் காத்ரி, சில ஆயுர்வேத வைத்தியம் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளின் அபாயங்களைக் குறைக்கலாம் என்கிறார்.

jaggery

பழைய வெல்லம் (கருப்பு நிறமாக இருக்கும்) மற்றும் இரண்டு பல் பூண்டு, எவ்வாறு இதயக் கோளாறுகளைத் தடுக்கும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

இரண்டு பல் பூண்டு மற்றும் பழைய வெல்லம் சேர்த்து சட்னி செய்வது. இதை காலை உணவு அல்லது மதிய உணவுடன் சாப்பிடுங்கள்.

இது வாயு தொடர்பான கோளாறுகளுக்கு உதவுகிறது, வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்கிறது, கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கிறது, இது குளிர்காலம் தொடர்பான இதய பிரச்சினைகளைத் தவிர்க்கிறது, என்று காத்ரி பகிர்ந்து கொண்டார்.

எவ்வாறாயினும், இந்த கலவையானது இயற்கையில் வெப்பத்தை உருவாக்கும் என்பதால், கோடையில் இதை ஒருவர் தவிர்க்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடாவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள், அரை ஸ்பூன் ஆளிவிதை (வறுக்காதது), அல்லது சுக்கு மற்றும் கருப்பு மிளகு (2 கிராம்), அல்லது கருப்பு எள் விதைகளை (ஒரு ஸ்பூன்) மென்று சாப்பிடலாம் என்று ஆயுர்வேத நிபுணர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment