/indian-express-tamil/media/media_files/Lr5TGWIYxwNRnVwKJDj1.jpg)
அழகு என்றால் உடலுக்கு வெளிப்புற பூச்சுகளால் மட்டுமே வருவது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை மாற்றி எழுதுகிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தின் படி, உண்மையான அழகு என்பது உள்ளத்தின் அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்தது. மன அமைதி, உடலில் "ரச தாத்து" (rasa dhatu) எனப்படும் நீர்ச்சத்தை அதிகரித்து, சருமத்திற்கு ஒரு பொலிவைக் கொடுக்கிறது. இந்த ரகசியத்தை பிரபல ஆயுர்வேத மருத்துவர் வைஷாலி சுக்லா விளக்குகிறார்.
இயற்கையான முறையில் சருமப் பராமரிப்பு:
கடலை மாவு மற்றும் மஞ்சள் மாஸ்க்: கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் செய்வது, உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவும் ஒரு எளிய வழி. இதைத் தொடர்ந்து செய்வது, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, பொலிவை அதிகரிக்கும்.
இயற்கை மாய்ஸ்சரைசர்: ஃபேஸ் மாஸ்க் போட்ட பிறகு, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, இயற்கையான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, வெயிலில் செல்லும்போது கவனம் தேவை. மாஸ்க் போட்ட பிறகு, அடுத்த 3-4 மணி நேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
உள் ஆரோக்கியம் முக்கியம்: வெளி அழகை விட, உடல் ஆரோக்கியம் தான் உண்மையான அழகுக்கு அடிப்படை. குடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி இரண்டும் சீராக இருந்தால், உங்கள் சருமம் தானாகவே ஒளிரும். மன அமைதியை மேம்படுத்தும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இயற்கையான வழியில், ஆயுர்வேதத்தின் துணை கொண்டு, உங்கள் சருமத்தைப் பராமரித்து, நீண்ட நாள் அழகைப் பெறலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.