ரோஸ் வாட்டர், வெள்ளரி, கடல் உப்பு.. மிருதுவான கால்களுக்கு ஆயுர்வேத நிபுணர் டிப்ஸ்
குளித்த உடனேயே சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது, நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் உங்கள் உடலை ஸ்க்ரப் செய்வது உங்கள் கால்களில் கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும்.
ஷேவிங் செய்த பிறகு, நம் கால்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்! ஆனால் பெரும்பாலும், உள்ளே இருந்து வளரும் முடி, நம் கால்களை குண்டாக காட்டும்.
Advertisment
இந்த வளர்ந்த முடிகள் ஸ்ட்ராபெரி கால்களுக்கு வழிவகுக்கும். அதாவது ஸ்ட்ராபெர்ரி மீது விதைகள் இருப்பது போல், கருப்பு துளைகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. இருப்பினும், இது ஒரு தீவிரமான பிரச்சனை அல்ல, சரியான ஷேவிங் நுட்பங்கள் மற்றும் பிந்தைய பராமரிப்பு மூலம், அதைத் தடுக்கலாம்.
இது ஒன்றும் தீவிரமானது அல்ல - வளர்ந்த முடி மற்றும் திறந்த துளைகள் காரணமாக கருப்பு புள்ளிகள் தோன்றும். உங்கள் துளைகள் எண்ணெய் மற்றும் அழுக்குகளால் அடைக்கப்படும் போது, நீங்கள் ஸ்ட்ராபெரி தோலைப் பெறுவீர்கள்.
இந்த துளைகள் காற்றில் வெளிப்படும், ஷேவ் செய்த பிறகு, காற்றில் உள்ள எந்த அழுக்குகளும் துளைகளை கருப்பு நிறமாக மாற்றும் என்று அழகு நிபுணர் பூஜா நாக்தேவ் கூறினார்.
மேலும், ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிம்பிள் ஜங்தாவின் கூற்றுப்படி, இது வீக்கமடைந்த மயிர்க்கால் அல்லது வறண்ட சருமத்தால் ஏற்படலாம். குளித்த உடனேயே சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது, நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் உங்கள் உடலை ஸ்க்ரப் செய்வது உங்கள் கால்களில் கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும் என்று கூறினார்.
மேலும் நிலைமையைச் சமாளிக்க சில வழிகளை அவர் பரிந்துரைத்தார்.
ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரி
வெள்ளரிக்காய் அமைதியான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ரோஸ் வாட்டர் அடைபட்ட துளைகளைத் திறக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் சாறுடன் ரோஸ் வாட்டரை கலந்து கால்களில் 15 நிமிடங்கள் தடவவும், என்று அவர் பரிந்துரைத்தார்.
கடல் உப்பு
டாக்டர் ஜங்தாவின் கூற்றுப்படி, கடல் உப்பு சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் உடலில் உள்ள தாது சமநிலையை மீட்டெடுக்கிறது. கடல் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஒரு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கி, 1-2 நிமிடங்கள் கால்களில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும், பின்னர் தண்ணீரில் கழுவவும்.
பிரெளன் சுகர் மற்றும் எண்ணெய்
பிரவுன் சுகர் மற்றும் எண்ணெயுடன் எக்ஸ்ஃபோலியேட் செய்வது, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை அகற்றி, பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. இது முடி வளரும் வாய்ப்புகளையும் நீக்குகிறது.
1/2 கப் பிரவுன் சர்க்கரை, 1/2 கப் பாதாம் எண்ணெய் மற்றும் 3-4 சொட்டு கிராம்பு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை கால்களில் தடவி சில நிமிடங்களுக்கு வட்டமாக தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும், என்று டாக்டர் ஜங்தா பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“