/tamil-ie/media/media_files/uploads/2022/02/hot-water-1200.jpg)
Health benefits of drinking hot water
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் சுமார் எட்டு முதல் 10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
தண்ணீர் உங்களை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும் அதே வேளையில், சூடாக இருக்கும்போது அதன் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்!
வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். "மருத்துவத்தின் பாரம்பரிய மற்றும் மாற்று நீரோடைகள்’ பெரும்பாலும் சூடான நீரை சிறந்த ஆரோக்கியத்துடன் இணைத்துள்ளன, எனவே இது மாறுவதற்கான நேரம்" என்று ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி கூறினார்.
மருத்துவர் கோஹ்லி சூடான நீரை குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.
சளி பிடிக்கும் போது, பலருக்கும் மூக்கு அடைக்கும். இது மிகவும் சங்கடமானதாக இருக்கும். ஒரு கப் வெந்நீர் இதை சரிசெய்யும்.
மலச்சிக்கலுக்கு நீரிழப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். "எந்த வெப்பநிலையிலும் தண்ணீர் குடிப்பது உங்கள் குடல்களை மீண்டும் நகர்த்துவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
வெந்நீரைக் குடிப்பதால், உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கிறது, இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் வெந்நீர் உதவும். "வயிற்றில் சூடான கம்ப்ரஸைப் பயன்படுத்துவதும், சீரான இடைவெளியில் வெந்நீரைக் குடிப்பதும் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்பின் போது நிவாரணம் அளிக்கிறது.
வெந்நீர் குடிப்பது உங்கள் சருமத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நிபுணரின் கூற்றுப்படி, "இது தோல் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது, முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்குகிறது".
காலையில் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. இது வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது.
“சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. வெளிப்புற கூறுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் அமைப்பை சுத்தப்படுத்துகிறது," என்று மருத்துவர் கோஹ்லி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.