Advertisment

ஏலக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதை எப்படி சாப்பிடுவது? ஆயுர்வேத நிபுணர் சொல்கிறார்!

ஏலக்காய் சுவையானது மட்டுமல்ல, எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது என்று ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பவ்சர் கூறினார்.

author-image
WebDesk
New Update
cardamom

Ayurvedic Expert shares healing properties of cardamom

ஏலக்காய்’ அதன் தனித்துவமான சுவை, சிறந்த வாசனைக்காக பல இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பவ்சர் கருத்துப்படி, ஏலக்காய்’ சுவையானது மட்டுமல்ல, அது பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

Advertisment

ஏலக்காயின் பல குணப்படுத்தும் பண்புகளை, நிபுணர்’ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். மேலும் அதை உங்கள் உணவில் எவ்வாறு சேர்க்கலாம் என்பதையும் விளக்கினார். இங்கே பாருங்கள்.

ஏலக்காய் ஆயுர்வேதத்தில் பாலிடிப்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் (பாலிடிப்சியா) தாகமாக உணர்ந்தால், அவர்கள் பசியுடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தால், ஏலக்காய் உங்களுக்கு உதவும்.

ஆயுர்வேதத்தின் படி, ஏலக்காய் மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்துகிறது. மேலும் இது ஒரு சிறந்த செரிமானமாக கருதப்படுகிறது, வீக்கம் மற்றும் குடல் வாயுவைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.

குறிப்பாக வயிறு மற்றும் நுரையீரலில் கபம்-ஐ சமநிலைப்படுத்த இது சிறந்தது. வாதத்தை அமைதிப்படுத்தவும் இது பயன்படுகிறது. ஏலக்காயின் சூடாக்கும் மற்றும் நச்சு நீக்கும் விளைவுகள், உடலில் உள்ள நச்சுகளை குறைப்பதற்கும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகின்றன.

ஒரு சக்திவாய்ந்த மசாலாவாக இருக்கும் அதே வேளையில், ஏலக்காய் அவற்றின் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக மெளத் ஃபிரெஷ்னராக (mouth freshener) பயன்படுத்தப்படுகின்றன. "இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது இரத்த அழுத்தம், ஆஸ்துமா, அஜீரணம், டைசூரியா மற்றும் பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்திற்கு நல்லது மற்றும் சுவை மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது" என்று மருத்துவர் பாவ்சர் கூறினார்.

மேலும், ஏலக்காய் நிவாரணம் அளிக்க உதவும் சில பிரச்சனைகளையும் அவர் பட்டியலிட்டார்.

* பசியின்மை

*வாந்தி

* இரைப்பை அழற்சி

*தொண்டை எரிச்சல்

* வாய் துர்நாற்றம்

* சிறுநீர் கழிக்கும் போது வயிற்றில் எரியும் உணர்வு.

*வாய்வு

*அஜீரணம்

*விக்கல்

*அதிக தாகம்

* வெர்டிகோ

உங்கள் உணவில் ஏலக்காயை சேர்க்கும் வழிகளையும் பாவ்சர் பட்டியலிட்டுள்ளார்.

* உங்கள் வழக்கமான தேநீரில்’ ஏலக்காயின் ஒரு சிறிய துண்டு சேர்க்கலாம்.

*ஏலக்காயை 250 – 500 மில்லி என்ற அளவில் பொடி செய்து நெய் அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

*வாய் துர்நாற்றம் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மசாலாவை மென்று சாப்பிடுங்கள் அல்லது சாறுகளை சுவைக்க வாய்க்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

*உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன், ஏலக்காய் டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை - மூன்று முறை குடிக்கவும். “உங்கள் உடல் பசி, உணவை சரியாக ஜீரணிக்க மற்றும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் உணர்வைக் குறைக்க இது எப்படி உதவுகிறது என்பதைப் பாருங்கள் என்று பாவ்சர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment