/tamil-ie/media/media_files/uploads/2022/04/pexels-element-digital-973401-1.jpg)
Ayurvedic home remedy for Strong and Silky hair
வறண்ட, உதிர்ந்த முடி’ கோடையில் பலர் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். எனினும், நீங்கள் அவற்றை சமாளிக்க விலையுயர்ந்த பொருட்கள் வாங்க தேவையில்லை. ஒரு எளிய தீர்வு உங்கள் மீட்புக்கு உதவும். என்று ஆயுர்வேத பயிற்சியாளர் வைத்யா மிஹிர் காத்ரி கூறினார்.
வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களால் " பளபளப்பான முடியாக" மாற்றலாம் – நெல்லிக்காய் பொடி மற்றும் ஆமணக்கு எண்ணெய்.
அதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி
தண்ணீர்
10 மில்லி - விளக்கெண்ணெய்
முறை
நெல்லிக்காய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதில், உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து, 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்க்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
பேஸ்ட்டை உச்சந்தலையிலும், முடியிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு சாதாரண சான்ஸ் ஷாம்பு கொண்டு கழுவவும். 6-8 மணி நேரம் கழித்து அல்லது மறுநாள் ஷாம்பு போடவும்.
இந்த பேஸ்ட் உங்கள் முடியை பட்டுப் போலவும் பளபளப்பாகவும் உணரச் செய்கிறது.
உச்சந்தலையில் மற்றும் உடலில் ஏற்படும் அரிப்புகளை எதிர்கொள்ள:
* கொதிக்கும் நீரில் வேப்ப இலைகளை சேர்க்கவும்; பின்னர் இந்த தண்ணீரை குளிக்கும் நீரில் சேர்க்கவும்.
* தினமும் 4-5 வேப்ப இலைகளை மென்று சாப்பிடுங்கள்.
கூடுதலாக சிட்ரஸ், அதிகப்படியான உப்பு மற்றும் புளித்த உணவு பொருட்களை கோடையின் உச்சத்தில் தவிர்க்க மருத்துவர் காத்ரி பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.