பலர், தங்களின் பரபரப்பான காலை நேரம் காரணமாக, மாலை அல்லது இரவில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள்.
ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு’ மாலை ஏற்ற நேரமா? ஆயுர்வேதத்தின் படி, இது அனைவருக்கும் பொருந்தாது என்று மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா கூறினார்.
ஆயுர்வேதம் மாலை நேரத்தை ஓய்வெடுக்கும் நேரமாக கருதுகிறது. மாலை நேர உடற்பயிற்சிகள் சிறந்தவை அல்ல என்று நிபுணர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.
உங்களுக்கு காலையில் எழுவது கடினமாக இருந்தால் அல்லது இரவில் சீக்கிரம் தூங்க சிரமப்பட்டால் - மாலையில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு ஏற்றது அல்ல," என்று அவர் கூறினார்.
ஏன்?
எந்தவொரு இயக்கமும் வாதத்தை தூண்டுகிறது. அதிலும் உடற்பயிற்சி குறிப்பாக வாதத்தைத் தூண்டும் செயலாகும். அவ்வாறு செய்வது ஒருவரின் தோஷத்தைத் தொந்தரவு செய்யும்.
"இரவு, இயற்கையாகவே வாதம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நேரம். எனவே மாலையில் உடற்பயிற்சி செய்வது வாதத்தை அதிகரிக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீர்குலைக்கும்.
ஒருவர் மாலையில் மட்டுமே வேலை செய்ய முடியுமா?
மாலையில் எந்த கடினமான வேலையிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. ஒருவேளை நீங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், சில குறிப்புகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வரலட்சுமி கூறினார்.
* உடற்பயிற்சிக்கு முன்,உங்கள் உடலில் சூடான எண்ணெயை தடவவும்
* மிதமான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
* உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு சூடான மூலிகை தேநீர் பருகவும்.
* உங்கள் தூக்கத்திற்கும், உடற்பயிற்சிக்கும் இடையில் குறைந்தது இரண்டு மணிநேர இடைவெளியை விட்டு விடுங்கள்
* உங்கள் தூக்கம் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டால் மாலை உடற்பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “