Ayurvedic skincare routine for healthy skin Tamil News : ஒருவரின் சருமத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். அதிக மாசுபாடு மற்றும் மன அழுத்த நிலைகளுக்கு மத்தியில் சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை உறுதி செய்வதற்காக, ஒருவரின் சரும வகையின் அடிப்படையில் பிரத்யேக சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சந்தையில் பலவிதமான சரும பராமரிப்பு பொருட்கள் கிடைக்கும்போது, சில வேளைகளில் நமது பூர்வீகத்திற்கு திரும்பிச் சென்று சில பழைய குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பின்பற்றுவது அவசியம். அந்த வரிசையில் சமீபத்தில், ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி எளிய மற்றும் பயனுள்ள சரும பராமரிப்பு வழக்கத்தை பகிர்ந்து கொண்டார். இதற்கு அதிகப்படியாக செலவுகள் செய்ய தேவையில்லை.
“சரும பராமரிப்பு என்பது தாமதமாக பிரபலமடைந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சருமத்திற்கு நேரம், முயற்சி, சுத்தமான பொருட்கள் மற்றும் அதற்கான அன்பு தேவை என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பலர் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் சருமம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் ”என்று டாக்டர் கோலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நிபுணர் பரிந்துரைத்தபடி, ஆரோக்கியமான சருமத்திற்கான இந்த எளிய ஆயுர்வேத சரும பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றவும்:
1.வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். இறந்த சரும செல்கள், தண்ணீரில் சிறிய கடற்பாசிகள் போல ஊறி உப்பிய நிலைக்கு வரும். இந்நிலை, அவற்றை அகற்றுவதை எளிதாக்குகிறது.
2. முகம் ஈரமாக இருக்கும்போதே, ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள லேசாக எண்ணெய் தடவவும். இதன் விளைவாக, உங்கள் சருமம் எரிச்சல் அடையாது.
3. 2 டீஸ்பூன் ஓட்ஸ் மாவு மற்றும் 1 டீஸ்பூன் தண்ணீருடன் ubtan பேக் தயாரிக்கவும். உங்கள் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது விரல் நுனியை அந்தக் கலவையில் நனைத்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யவும். இது இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை மட்டுமே நீக்குகிறது.
4. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிது வெற்று நீர் அல்லது ரோஸ் வாட்டரை நிரப்பி, முகத்தில் ஸ்ப்ரே செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil