Ayurvedic tips to take proper care of your eyes Tamil News : தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலான மக்கள் திரைகளுக்கு முன்னால் கணிசமான நேரத்தை செலவழித்து, வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் அல்லது படிக்கிறார்கள். இது பலவீனமான பார்வை உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்து.
நம் கண்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் கடந்த சில தசாப்தங்களில் மொபைல் மற்றும் லேப்டாப் திரைகளின் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால், கண்களுக்கு வேலை அதிகம் எனலாம். இந்த அதிகப்படியான பயன்பாடு தலைவலி, எரிச்சல் அல்லது உலர் கண்கள், கருவளையம் மற்றும் பார்வை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளை உருவாக்குகிறது. மேலும், LED மற்றும் TFT திரைகளில் இருந்து வெளிப்படும் இயற்கைக்கு மாறான ஒளியைக் கண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆரோக்கியமான கண்களுக்கு இந்த ஆயுர்வேத கண் பராமரிப்பு குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.
*ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் (கழிவறையைப் பயன்படுத்துவதற்கு முன் அல்லது பின்), உங்கள் வாயில் தண்ணீரை நிரப்பி, கண்களை மூடிக்கொண்டு சில நொடிகள் வைத்திருங்கள். பிறகு தண்ணீரைத் துப்பவும். இப்படி 2-3 முறை செய்யவும்.
*திரிபலா வாட்டர் ஐ வாஷ் அல்லது ஐ வாஷ் கப் பயன்படுத்துவதும் நன்மை பயக்கும்.
*ஷட்கர்மா: ஆயுர்வேதம் உடலை சுத்தப்படுத்தவும், நச்சுகளை அகற்றவும், வலுப்படுத்தவும், நோய்களிலிருந்து விடுபடவும் ஆறு சுத்திகரிப்பு நுட்பங்களை விவரிக்கிறது. அவற்றில், நெட்டி மற்றும் ட்ராடக், கண் வறட்சி மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஆயுர்வேத தீர்வாக செயல்படுகிறது.
* உங்கள் கண்கள் மற்றும் முகத்தைக் குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் 10-15 முறை தெளிக்கவும். மாலையில் நீங்கள் வேலையிலிருந்து திரும்பும்போது மீண்டும் அதேபோன்று செய்யவும்.
* சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரை ஒருபோதும் கண்களில் பயன்படுத்த வேண்டாம். மேலும், திடீர் வெப்பநிலை மாற்றங்களைத் தவிர்க்கவும். உதாரணமாக, நீங்கள் வெப்பமான இடத்தில் வியர்வையோடு இருந்தால், உங்கள் முகம் மற்றும் கண்களில் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்வதற்கு முன், உங்கள் உடல் சீராகும் வரை 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
*அஞ்சனாவின் பயன்பாடு: அஞ்சனா என்பது ஒரு ஆயுர்வேத தயாரிப்பு. இது நல்ல கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகக் கண் இமைகளின் உட்புறத்தில் பயன்படுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.