Advertisment

சரும பராமரிப்பு அலெர்ட் : இந்த ஆயுர்வேத ரகசியம் உங்கள் முகப்பருவை குணப்படுத்தும்!

Ayurvedic trick cure acne aloe vera skincare Tamil News சுத்தமான உணவு, நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் சரியான தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய சீரான வாழ்க்கை முறை இதனை சரிசெய்ய உதவும்.

author-image
WebDesk
New Update
Ayurvedic trick cure acne aloe vera skincare Tamil News

Ayurvedic trick cure acne aloe vera skincare Tamil News

Ayurvedic trick cure acne aloe vera skincare Tamil News : முகப்பரு என்பது உலகம் முழுவதும் உள்ள பொதுவான சரும பராமரிப்பு பிரச்சனை. டீன் ஏஜ் வயதில் அவை இருப்பது இயல்பானது என்றாலும், வயது வந்தோருக்கு இந்த முகப்பரு ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. இது ஒரு அடிப்படை சுகாதார நிலையைக் குறிக்கும். எனவே, மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Advertisment

என்றாலும் கூட, அதைக் கட்டுப்படுத்தவும், சிக்கலை முழுவதுமாக அகற்றவும் உதவும் உதவிக்குறிப்புகள் உள்ளன. பெரும்பாலும், முகப்பரு மோசமான சரும பராமரிப்பு பழக்கம் மற்றும் உணவு பிரச்சனைகளின் விளைவுதான். சுத்தமான உணவு, நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் சரியான தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய சீரான வாழ்க்கை முறை இதனை சரிசெய்ய உதவும்.

அழகுக் குறிப்புகள் அடங்கிய தளமான Glow and Green-ன் நிறுவனர் ருச்சிதா ஆச்சார்யா கூறுகையில், ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல், நவீன வாழ்க்கை முறைகள் மற்றும் இயற்கையான பொருட்கள், மருந்துகள் மற்றும் மூலிகைகளுடன் ஆரோக்கிய உணர்வுள்ள பழக்கவழக்கங்களை ஒருங்கிணைத்து நோயற்ற மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறது என்கிறார்.

"ஆயுர்வேதத்தின் முதன்மை நோக்கம், மனம், உடல் ஆகியவற்றின் இடையே தனிநபரின் சமநிலையை மீட்டெடுப்பதுதான். முகப்பரு மற்றும் பிற சரும தொடர்பான பிரச்சினைகள் உட்பட நமது நோய்களை குணப்படுத்த வேண்டிய தகவலை இது வழங்குகிறது" என்று அவர் கூறுகிறார்.

ஆச்சார்யா, ஓர் விரைவான மற்றும் எளிதான தீர்வை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அது உங்கள் முகப்பருவுக்கு உதவுவது மட்டுமல்லாமல், பணத்தையும் சேமிக்கும்.

“கற்றாழை மிகவும் பயனுள்ள மற்றும் செலவு குறைந்த சிறந்த மருந்து. ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி, அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை முகப்பருவுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய சிகிச்சையாக அமைகிறது. கற்றாழை சருமத்தை மெதுவாக சுத்தப்படுத்துவதற்கு நன்மை பயக்கும். இது ஒரு கிருமி நாசினி அதாவது பாக்டீரியா பரவுவதைத் தடுக்கிறது. பாலிசாக்கரைடுகள் மற்றும் கிபெரெலின்கள் இதில் காணப்படுகின்றன. இவை, புதிய செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு அஸ்ட்ரிஜென்டாக, இது அதிகப்படியான கொழுப்பு, அழுக்கு மற்றும் நுண்ணுயிரிகளை வெளியேற்றுவதன் மூலம் துளைகளை சுருக்குகிறது” என்று அவர் விளக்குகிறார்.

முகப்பருவுக்குக் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது?

கற்றாழை செடியை பாதியாக வெட்டி, பருத்தி துணியைப் பயன்படுத்தி, நேரடியாக உங்கள் பரு மீது ஜெல்லைப் பூசவும். அல்லது ஒரு ஹெல்த் ஸ்டோரில் காற்றாழை ஜெல் பாட்டில் வகையை வாங்கி, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அதைப் பயன்படுத்துங்கள்.

முடிவுகளைப் பார்க்க 10-15 நாட்களுக்கு இந்த முறையைத் தொடர்ந்து முயற்சி செய்யவும். இதை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்து, அதன் விளைவுகளை நீங்களே பாருங்கள்!

கற்றாழை எந்த பக்க விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் நிபுணர் எச்சரிக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Skincare Ayurveda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment