Azhagu Serial : சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக வலம் வந்தவர் விஜே சங்கீதா. பின்னர் நடிகையாக அறிமுகமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அழகு’ சீரியலில் வில்லியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
ரேவதி, ஸ்ருதி ராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கும் அந்த சீரியலில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனங்களை வெளிக்காட்டி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதா, விருப்பட்டு வி.ஜே-வாகியிருக்கிறார். அதன் பிறகு சீரியல் வாய்ப்பு வர, தற்போது ஆங்கரிங் பண்ணுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம்.
”என்னுடைய பலமும், பலவீனமும் கோபம் தான். ரொம்ப அதிகமா கோபப்படுவேன். அதே நேரத்துல எல்லோர்கிட்டேயும் ஜாலியா பேசுவேன். எனக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேர் தான். எப்பவும் சிரிச்சிட்டே ஆங்கரிங் பண்ணிட்டு இருப்பேன். இப்போ ஷூட்டிங்கில் பிஸியா இருக்கிறதனால எந்த ஷோவும் பண்ண முடியலை” என்று முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது குறிப்பிட்டிருந்தார் சங்கீதா.
ஆன்லைனில் தான் பெரும்பாலான உடைகளை வாங்குவாராம் சங்கீதா. உடை விஷயத்தில் அவரின் அம்மாவும் நிறைய செலக்ட் பண்ணித் தருவாராம். அழகு சீரியலில் சங்கீதா அணியும் உடைகள் அனைத்தும், அவரே செலக்ட் பண்றது தானாம். வீட்டில் இரண்டு நாய்களை வளர்க்கும் சங்கீதா, அவற்றுடன் தான் நிறைய நேரத்தை செலவிடுவாராம். வீட்டில் பொழுது போக்கு என்றாலே நாய்களுடன் நேரம் செலவிடுவது மட்டும் தானாம். படபிடிப்பில் இருக்கும் போது அவற்றுடன் நேரம் செலவழிக்க முடியாது என்பதால், ஒருநாள் லீவு கிடைத்தாலும் நாய்களுடன் தான் தனது முழு நேரத்தையும் செலவிடுவாராம். இதற்காக வெளியில் போவதைக் கூட தவிர்த்து விடுகிறார் என்றால் பாருங்களேன்…
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Azhagu serial vj sangeetha poorna sun tv
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!