ஆண்மைக் குறைவிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமாக இருக்கும் காரணிகளை மருத்துவர் யோகா வித்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவை என்னவென்று தற்போது பார்க்கலாம்.
உடல் வெப்பம் அதிகரிப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும்,அதிகமாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பது, விதைப்பைகள் வீக்கம் போன்றவற்றால் ஆண்மைக் குறைவு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், பாகற்காய், வேப்பிலை போன்ற அதிக கசப்பான உணவுகள் சாப்பிடுவதும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். மேலும், ஜீன்ஸ் பேன்ட் போன்ற இறுக்கமான ஆடைகள் உடுத்துவதும் ஆண்மைக் குறைவிற்கு காரணமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலைக் குளிர்விக்கும் உணவுகளை சாப்பிடாவிட்டால், அவை ஆண்மைக் குறைவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரவு நேர பணியில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதனை சரி செய்யலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது, காட்டன் ஆடைகளை உடுத்துவது, செல்போனை நீண்ட நேரம் பேன்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தாதது ஆகியவற்றை கடைபிடிக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
சின்க் சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சாப்பிடலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“