நடிகை அனுஷ்காவின் அம்மா பர்ஃபுல்ல ஷெட்டி, அனுஷ்கா மற்றும் பிரபாஸ் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி தெலுங்கு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இந்த ஜோடியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரையும் திரையில் பார்த்து கொண்டாடாத ரசிகர்கள் ரொம்பவும் கம்மி. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அந்த ஜோடி யாரென்று..
பிரபாஸ் - அனுஷ்காவின் ஜோடியை பாகுபலி படத்தில் பார்த்த பின்பு இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக ஏகப்பட்ட வதந்திகள் உலாவர ஆரம்பித்தன. அதற்கு ஏற்றார் போல் இந்த ஜோடிகளும் விருது நிகழ்ச்சிகள் , பொது விழாக்கள் என அனைத்திலும் ஒன்றாக கலந்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் தான் இருவரும் தங்களது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ”எங்களது திருமணம் குறித்து மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்” என்று இருவரும் பேட்டியளித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/3-1.png)
அதன் பின்பு இவர்கள் குறித்த செய்திகள் குறைந்தன. இந்நிலையில் அனுஷ்காவின் அம்மா பர்ஃபுல்ல ஷெட்டி மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு புதிய வதந்தியை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “ எனக்கு பிரபாசை பிடிக்கும். அவரும் அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்கள் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.