இதுவரை 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன் – உடல் கேலி பற்றி பாக்கியலட்சுமி நேஹா மேனன்

Baakiyalakshmi Nehah Menon about Body shaming Tamil News நான் சந்தித்த டிசைனர்கள் வழியே நான் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

Baakiyalakshmi Nehah Menon about Body shaming Tamil News
Baakiyalakshmi Nehah Menon about Body shaming Tamil News

Baakiyalakshmi Nehah Menon about Body shaming Tamil News : உடல்கேலியை கடந்து வராதவர்கள் யாருமில்லை. அதிலும், திரைத்துறையில் இருப்பவர்கள் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சந்திப்பதுண்டு. அந்த வரிசையில் சன் டிவியில் நிலா சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி தொடர் என வரிசையாக ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார் நேஹா மேனன். அவர் சமீபத்தில் உடல் கேலியை எவ்வாறு கடந்து வந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டார்.

“நான் Chubby மற்றும் உயரமும் குறைந்து இருப்பேன். சில காட்சிகளில் எனக்கே என்னடா இவ்வளவு குண்டா தெரிகிறோம் என்றிருக்கும். ஆனால், நாம் உடுத்தும் உடைகள் மூலம் அதனைக் கட்டுப்படுத்தலாம். நான் சந்தித்த டிசைனர்கள் வழியே நான் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

என்னைப்போல் இருப்பவர்கள், நீளமான கட்டம் போட்ட உடைகள் உடுத்தினால், உடல் எடை குறைந்தது போலவும் உயரமாக இருப்பது போலவும் தோற்றம் பெறுவீர்கள். மேலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகளுக்கு, வெயிஸ்ட் பெல்ட் உபயோகிக்கலாம். அதேபோல எப்போதுமே நான் எல்போ ஸ்லீவ் வைத்துதான் உடுத்துவேன். இந்த டிப்ஸ்களை எப்போதும் நான் பின்பற்றி வருகிறேன்.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உடல் கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். அம்மாவிடம் சென்றுதான் என் வேதனைகளைக் கொட்டுவேன். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் அம்மாதான். நம்மைப் பற்றி கமென்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது.

ஏதாவது நெகட்டிவ் கமென்ட்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல ஒரு 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். எனக்கு வரும் மெசேஜுகளை பார்த்திட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது.

நம் மேல் நாம் முதலில் அன்பு காட்டவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். நான்கு நல்ல விதமான கமென்ட் வந்தாலும் அதனை பாசிட்டிவ்வாக ஏற்றுக்கொள்கிறேன். எனக்காக நேரம் செலவழிக்க கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் என்னைத் தப்பாகப் பேசுபவர்களைக் கண்டு பயப்படுவேன். ஆனால், இப்போது அப்படி அல்ல. மனக்குழப்பத்தை தகர்த்தியுள்ளேன்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Baakiyalakshmi nehah menon about body shaming tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com