/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-115.jpg)
baakiyalakshmi radhika real name baakiyalakshmi radhika
baakiyalakshmi radhika real name baakiyalakshmi radhika : விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஹிட்டடித்து வருகிறது. நேற்றோடு இந்த சீரியலின் மெகா சங்கம காட்சிகள் முடிவடைந்தன.
இந்த சீரியலின் முக்கிய நாயகி வேறு தான். ஆனால் சின்ன வேடத்தில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்திதா ஜெனிபர்.
இளம் வயதிலேயே மீடியாவில் நுழைந்தவர் ஜெனிஃபர். நடிகை, டான்ஸர்.. எனப் பன்முகம் கொண்டவர். தமிழ்த் திரைப்பட உலகில் `நந்திதா'வாக அறியப்பட்டவர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ' Mr&Mrs கில்லாடிஸ்' நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் பங்கேற்றார்.
அப்பா கோரியோகிராஃபர் என்பதால அவர் கூட ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்குப் செல்வார். அப்பாவுக்கு நந்தித்தாவே அசிஸ்டென்ட் கோரியோகிராஃபரா இருந்தார். டான்ஸ் அவரின் பேஷனாக ஆரம்பிச்சது. `காதல் ஜாதி' படம் மூலமா அவரின் திரைப் பயணம் ஆரம்பிச்சது.
பத்தொன்பதாவது வயசில் இவருக்கு திருமணம் நடந்துச்சு.திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்கிறார். இப்போ கூட இரண்டு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ரொம்ப பாசிட்டிவான பர்சன் சொல்லப்போனா அதுதான் அவரின் பியூட்டி சீக்ரெட்.
நீளமான கூந்தல் ரகசியத்தை பகிர்ந்தார் “ எந்தவித கெமிக்கலையும் என் முடிக்குப் பயன்படுத்த மாட்டேன். இயற்கையான முறையில்தான் முடியைப் பராமரிப்பேன். வாரத்துக்கு மூன்று முறை வெங்காய ஜூஸ் போட்டு முடி அலசுவேன். இயற்கையாக இருக்கிறதுனால தலை முடியும் செழிப்பா வளருது”
பார்த்திப கனவு படத்தில் தினேஷ் மாஸ்டருடன் இவர் நடித்து ஆடிய குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.