/tamil-ie/media/media_files/uploads/2021/06/Nehah4up.jpg)
Baakiyalakshmi Serial Actress Nehah Menon on Body Shaming Tamil News
Baakiyalakshmi Serial Actress Nehah Menon on Body Shaming Tamil News : குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, 10 ஆண்டுகளாக சின்னதிரையில் செல்ல குழந்தையாக இருப்பவர் நேஹா மேனன். நிலா எனும் சீரியலில் முதன்மை குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர், பிறகு வாணி ராணி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். தற்போது ஹிட் தொடர் வரிசையில் டாப்பில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Nehah.png)
திரைத்துறையில் என்ட்ரியாக வேண்டுமென்றால், வெளிர் நிறம், ஒல்லியான தேகம் உள்ளிட்ட சில ரூல்ஸ் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. அந்த வரிசையில் சப்பியாக இருக்கும் நேஹா, உடல் கேலி பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Nehah1.png)
கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நேஹா, ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எதிர்கொண்டு வருகிறார். இதைப் பற்றிக் கேட்டபோது, "முன்பு சமூக வலைத்தள பயன்பாடு அவ்வளவாக இல்லை. அதனால், உடல் கேலி தொடர்பாக எந்தவிதமான விமர்சனங்களையும் அவ்வளவாகப் பார்த்ததில்லை. ஆனால், சமீபத்தில் நிறைய விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Nehah5.png)
எந்த அளவிற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறதோ, அதே அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வருகின்றன. 'எப்படி இருக்கீங்க' என்று கேட்பதைவிட 'கொஞ்சம் எடை போட்டுடீங்க போல' என்று கேட்பவர்கள்தான் அதிகம். ஒருகட்டத்தில் இந்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அம்மாவிடம் அழுதுவிட்டேன்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Nehah6.png)
ஒவ்வொருவருடைய உடலமைப்பு வெவ்வேறு மாதிரி இருக்கும். எனக்கு உடல்நல பிரச்சினையும் இருக்கிறது. நான் மற்றவர்கள் பணத்தை பிடுங்கி அதனால் சாப்பாடு வாங்கி சாப்பிடவில்லை. என் அப்பா எனக்கு சோறு போடுகிறார். இதுதான் என்னுடைய அதிகபட்ச ரிப்லை. இப்பொழுதெல்லாம் கமென்ட்ஸ் செக்ஷனை ஆஃப் செய்துவிட்டேன்" என்கிறார் நேஹா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.