/indian-express-tamil/media/media_files/2025/08/21/babloo-prithiveeraj-2025-08-21-12-37-56.jpg)
Babloo Prithiveeraj
'பப்லு' பிருத்விராஜ்... இந்த பெயரைக் கேட்டதுமே, நமக்கு சட்டென ஞாபகத்துக்கு வருவது அவரது எனர்ஜியும், அந்த துறுதுறு சிரிப்பும் தான். பப்லு பிரித்விராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அவரது இயற்பெயர் பிரித்விராஜ் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், "பப்லு" என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? சமீபத்தில், சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யமான கதையை இப்படித்தான் வெளிப்படுத்தினார்.
”ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருந்தேன். அங்க ஒருத்தர் என்னைப் பார்த்து நீங்க பிரித்விராஜ், இல்லையா? நான் உங்களை கூப்பிடவே இல்லையே. நாங்க உங்களை பிரித்விராஜ் சுகுமாரன்-னு கூப்பிட்டோம். நீங்க ஏன் வர்றீங்கனு கேட்டாரு. இந்த மாதிரி நிறைய குழப்பம் இருந்தது. தெலுங்குல இரண்டு, மூன்று பிருத்விராஜ்கள் இருந்தாங்க. அப்போ அவள் வருவாளா பெல்லி பிருத்விராஜ் கூப்பிடுவாங்க. அது எனக்கு ஒருமாதிரி இருந்தது. அதனால அனிமல் பட அப்புறம் நான் பப்லு பிருத்விராஜ் பேருக்கே போயிட்டேன்.
இது ஒரு நாடகத்துக்காக வச்ச பேரு இல்ல. இது என் வீட்ல எனக்கு வெச்ச செல்லப் பேரு. நான் சின்ன வயசுலேயே சைல்ட் ஆர்டிஸ்ட்டா 36 படங்கள் நடிச்சிருக்கேன். அப்போ என்னை 'மாஸ்டர் பப்லுன்னுதான் கூப்பிடுவாங்க. அந்தப் பெயரும் அப்போ ரொம்ப க்யூட்டாவும் இருந்துச்சு.
அப்புறம் நான் வளர்ந்து, "பாண்டிநாட்டுத் தங்கம்" படத்துல ஒரு பயங்கர வில்லனா நடிச்சேன். அந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கப் போனேன். எல்லாரும் என்னையப் பார்த்ததும், "ஏய், அது பப்லூ டா!"-ன்னு கத்துனாங்க. அந்த வில்லனுக்குப் போய் "பப்லு"ன்னு பேர் வச்சா, அது டைனமிக்கான வில்லனா பார்க்க முடியுமா? ஆனா எனக்கு அந்தப் பேரு ரொம்பப் பிடிச்சுப் போச்சு”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.