சுவையான பேபிகார்ன் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – 12
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
ஆப்ப சோடா- சிறிதளவு
அரைக்க
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
செய்முறை
முதலில் பேபிகார்னின் மேல் பட்டையை நீக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி பேபிகார்னை வேக வைக்கவும். சிறிது நேரம் போட்டு எடுத்தால் போதும். அடுத்து பாத்திரம் எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன்ஃப்ளவர் மாவு, அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்து அதை சேர்க்கவும். இப்போது அதில் உப்பு, தண்ணீர், சிறிது சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவில் பேபிகார்னை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பேபி கார்ன் பஜ்ஜி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“