சுவையான பேபி கார்ன் மசாலா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன்- 15
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
தக்காளி – 2
முந்திரிப் பருப்பு- 5
மிளகாய்த் தூள், தனியாத் தூள்- தலா அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- கால் டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி- கால் டீஸ்பூன்
தக்காளி சாஸ் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- அரை டீஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
பால்- அரை கப்
மஞ்சள்தூள்- 1ஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை
பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி மற்றும் பாதி குடைமிளகாயை வதக்கி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள், கஸ்தூரி மேத்தி, தக்காளி சாஸ், கரம் மசாலாத் தூள், உப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும். இதை வதக்கி ஆற வைத்த பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து வேக வைத்த பேபி கார்னை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். மீதம் உள்ள பாதி குடைமிளகாயை நறுக்கிச் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் சுவையான பேபி கார்ன் மசாலா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“