Advertisment

சுவையான பிஸ்தா பர்ஃபி; இப்படி செய்து பாருங்க

சுவையான பிஸ்தா பர்ஃபி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Badam Barfi.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான பிஸ்தா பர்ஃபி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்  

பால் – 1 லிட்டர்

பால் பவுடர் – ½ கப்

சர்க்கரை – 250 கிராம்

நெய் – தேவையான அளவு

நறுக்கப்பட்ட பிஸ்தா – தேவையான அளவு

பிஸ்தா எஸ்ட்ராக்ட் – 2 ஸ்பூன் 

செய்முறை 

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்கவும். பால்  பவுடரை சேர்த்து, கலவையை கிளறவும். இந்தக் கலவையில் பாலை ஊற்றி நன்கு கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்க்கவும். கலவை ஒரு மென்மையான மாவாக ஒன்றாக வரும். கலவை கெட்டியாக இருந்தால், மற்றொரு தேக்கரண்டி பால் சேர்க்கவும். பிறகு அதில் பொடித்த சர்க்கரை, பிஸ்தா எஸ்ட்ராக்ட் சேர்த்து கலக்கவும். 

தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள், விரைவில் கலவை கெட்டியாகத் தொடங்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறவிடவும். கலவையில் பிஸ்தாவை சேர்க்கவும். அதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை பிஸ்தா துண்டுகளை மேலே சேர்க்கவும். 4 முதல் 6 மணி நேரம் கழித்து சதுர வடிவில் கட் செய்து எடுக்கவும், அவ்வளவு தான் சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment