Advertisment

ஒரே நேரத்தில் 100 நுங்கு சாப்பிடுவேன் - பாக்கியலட்சுமி ஜெனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

Bakkiyalakshmi Serial Jeni Divya Ganesh Fitness Secrets காலை எழுந்ததும் ஜிம். பிறகு ஷூட்டிங். அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஜிம் என படுபிஸியாக இருந்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Bakkiyalakshmi Serial Jeni Divya Ganesh Fitness Secrets Tamil

Bakkiyalakshmi Serial Jeni Divya Ganesh Fitness Secrets Tamil

Bakkiyalakshmi Serial Jeni Divya Ganesh Fitness Secrets Tamil : சின்னதிரையின் கனவுக் கன்னியாக வளம் வந்துகொண்டிருப்பவர் திவ்யா கணேஷ். ஜெனி என்றால்தான் அனைவர்க்கும் பரீட்சையம். 'ஜெனி மாதிரி ஒரு பொண்ணுதான் வேண்டும்' என்ற கனவுடன் சுற்றி திரியும் ஏராளமான இளைஞர்களும் உண்டு. அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி தொடரின்மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து இருக்கிறார். அவருடைய சில பெர்சனல் பக்கங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisment
publive-image

சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதுதான் இவருடைய சிறு வயது கனவு. அதற்காகத்தான் மதுரையிலிருந்து சென்னை வந்திருக்கிறார். ஆனால், சில பல காரணங்களால் தடம் மாறி திரைத்துறைக்கு வந்துவிட்டார். அதுவும் நல்லதுதான். இல்லையென்றால் நல்ல கதாநாயகியை சின்னதிரை இழந்திருக்கும்!

publive-image

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை வேறு மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள்தான் அதிகம். அந்த வரிசையில், பக்கா மதுரை பெண்ணான திவ்யாவிற்கு ஏராளமான தடங்கல்கள். சக மனிதருக்குக் கிடைக்கவேண்டிய மரியாதைகூட கிடைக்காமல், ஏகப்பட்ட போராட்டங்களைக் கடந்து வந்திருக்கிறார். என்றாலும், தன்னுடைய இலக்கை நோக்கி ஓடும் ஓட்டத்தில் மனம் தளரவில்லை.

publive-image

ஒல்லி பெல்லி நடிகையாக இருந்தவர், சிறிது காலத்திலேயே கொஞ்சம் எடை போட, டயட் பக்கம் சாய்ந்திருக்கிறார். அதிலும் வெறித்தனமாக வொர்க் அவுட் வேறு. காலை எழுந்ததும் ஜிம். பிறகு ஷூட்டிங். அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஜிம் என படுபிஸியாக இருந்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் இவருடைய டயட் மெட்டிரியல்ஸ், அதாவது காய்கறி பழங்கள் என அனைத்தையும் பேக் செய்து எடுத்துச் செல்வாராம். பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடும் பெண் ஆனால், ஆடு, மாடு சாப்பிடுவதைப் போன்று கொறிக்கிறோமே என்கிற வருத்தம் இவருக்கு எப்போதும் உண்டு. என்றாலும், ஃபிட்டாக இருப்பதை நினைத்து கொஞ்சம் பெருமையும் இருக்கிறது!

publive-image

காலையில் க்ரீன் டீ, பிறகு 5-10 பாதம் ஆகியவற்றை தினமும் உட்கொள்வாராம். அதேபோல் நண்பகலில், மோர் அல்லது இளநீர் குடிப்பது இவருடைய வழக்கம். மதிய உணவைக் கூட சாப்பிடாமல், ஒரே வேளையில் 100 நுங்கு மட்டுமே கூட சாப்பிடுவாராம். ஸ்கிப்பிங் மற்றும் சைக்கிளின் செய்வதும் இவருடைய ஃபிட்னெஸ் சீக்ரட்டுகளில் ஒன்று.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment