கொஞ்சம் ராதிகா, கொஞ்சம் சாரதா சேர்ந்த கலவை நான் – பாக்கியலட்சுமி ஜெனிஃபர் பெர்சனல்ஸ்

Bakkiyalakshmi Serial Radhika Jenifer Personals ‘அம்மா அந்த கோபியை நம்பாதீங்க. அவன் உங்களை ஏமாத்துறான்’ என்று சொல்லுவார்.

Bakkiyalakshmi Serial Radhika Jenifer Personals Tamil news
Bakkiyalakshmi Serial Radhika Jenifer Personals Tamil news

Bakkiyalakshmi Serial Radhika Jenifer Personals Tamil news : அம்மன் தொடரில் சாரதாவாக மிரட்டுபவர், பாக்கியலட்சுமி தொடரில் மென்மையான ராதிகாவாக ஈர்க்க வைக்கிறார் ஜெனிஃபர். இவருடைய இயற்பெயர் ஜெனிஃபரா அல்லது நந்திதா முதற்கொண்டு அவரை பற்றிய பல சுவாரசிய தகவலைகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“என்னுடைய உண்மையான பெயர் ஜெனிஃபர் மட்டும்தான். பாரதிராஜா சாரின் ஈரநிலம் திரைப்படத்தில் நந்திதா என்று அறிமுகம் செய்ததால்தான் இந்த குழப்பம்” என்று தொடங்கும் ஜெனி டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகள். அதனால், நடனம் இவருக்கு மிகவும் இயல்பான ஒன்று. பின்னணியில் நடனமாகிக்கொண்டிருந்தவர் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ திரைப்படத்தில் ‘யாமினி யாமினி’ பாடலில் அறிமுகமானார். அப்போது அவருடைய வயது 15.

“சாரதா கதாபாத்திரத்தின் கோவமும் ராதிகா கதாபாத்திரத்தின் அமைதியும் கலந்த கலவைதான் ஜெனி. யாராவது தப்பு செய்தால் அவ்வளவு கோவம் வரும். அதேபோல, நான் இருக்கும் இடத்தை பாசிட்டிவ்வாக வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். நிறைய பேரு என்னை ஓவர் ஆட்டிடியூட் என்று சொல்லுவார்கள். ஆனால், அதுதான் நான். ஏழை பணக்காரர்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கமாட்டேன். நெகட்டிவ் ஆட்களை கண்மூடி ஒதுக்கிவைத்துவிடுவேன்.

பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சி எனப் பெரிய ஜாம்பவான்களோடு வேலை செய்தது ஏராளமான விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பார்த்திபன் கனவு படத்தின் பாடல் இந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கே சென்றாலும், அந்தப் பாடலுக்கு ஆடச் சொல்லி இன்னும் கேட்பார்கள்” என்கிறவர் தன் கணவர் மற்றும் மகனைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“என் கணவர் முன்பு நான் நடிக்கவே மாட்டேன். ஒரு வார்த்தை மிஸ் பண்ணிட்டா கூட டென்ஷன் ஆகிடுவாரு. என்னுடைய மகனைதான் கூப்பிடுவேன் எதுக்குமே. என் மகன் எட்டாம் பகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். நிறைய முறை பாக்கியலட்சுமி சீரியலை பார்த்து, ‘அம்மா அந்த கோபியை நம்பாதீங்க. அவன் உங்களை ஏமாத்துறான்’ என்று சொல்லுவார். இப்படிதான் என் குடும்பத்தோடு என் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறது” என்று நிறைவு செய்கிறார் ஜெனி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bakkiyalakshmi serial radhika jenifer personals tamil news

Next Story
ஆல்கஹால், அதிக காபி… இந்த உணவுகள்தான் இம்யூனிட்டியின் எதிரிகள்!cofee alcohol
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com