பக்ரீத் திருநாள்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஸ்பெஷல் கிளிக்ஸ்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டி கோவை, புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டி கோவை, புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை உட்பட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
2/6
இஸ்லாமியர்களுன் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயனமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு அவர்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
Advertisment
4/6
இதேபோல,கடற்கரை சாலை காந்தி திடல் எதிரே நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
5/6
புதுச்சேரியில் முல்லா வீதி, பெரியக்கடை, நெல்லித்தோப்பு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் சிறப்பு தொழுகை இன்று காலை 6.30 மணி முதல் நடைபெற்றது. சிறப்புத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
6/6
இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் சுல்தான்பேட்டையில் நடந்த திறந்த வெளி சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news