balaji murugadoss age bigg boss balaji : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக் பா சீசன் 4-ல் ஹவுஸ்மேட்டை மட்டுமில்லை ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிரவைத்துள்ள பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே விஜய் டிவியின் கனெக்ஷன் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா கலந்து கொண்டிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த பாலா எஸ்.ஆர்.எம் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பல்வேறு மாடலிங் பட்டங்களை வைத்திருக்கும் இவர், அழகு போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்திய இவர், இரண்டு ஸ்டார்ட்-அப்களின் இணை நிறுவனர். மேலும், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் டெட் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அதோடு மணீஷ் மல்ஹோத்ரா போன்ற மிகச் சிறந்த பேஷன் டிசைனர்களுக்கும், ரேம்ப் வாக் செய்திருக்கிறார்.
பாலா பல்வேறு அழகு போட்டிகளில் கலந்துகொண்டு தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். 2017-ல் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்பெக்ட் பாடி என்ற பட்டங்களை வென்ற பிறகு பாலா புகழ் பெற்றார். இந்த மாடல் 2018-ஆம் ஆண்டில் ருபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியாவை வென்றதோடு, மிஸ்டர் இன்டர்நேஷனல் 2019-ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பின்னர், பாலா தமிழ் படமான டைசன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் உள்ளார்.
இவர் யாஷிகாவுடன் சேர்ந்து, மிகச் சிற்ந்த பொழுப்போக்கு நிகழ்ச்சியாக இருந்த கனெக்ஷன் ஷோவில் கலக்கிய எபிசோடு இப்போது இணையத்தில் வைரல்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”