பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர்.
தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் “அழியாத கோலங்கள்’. பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம், தலைமுறைகள் உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் உருவானவர்கள்.
பாலு மகேந்திராவுக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மௌனிகா என மூன்று மனைவிகள்.

பாலுமகேந்திரா தன்னுடைய முதல் மனைவி அகிலா குறித்து பேசியது, எனக்கு அகிலா மனைவியாக கிடைத்தது முன்ஜென்மத்தில் நான் செய்த புன்னியம். அகிலாவை நான் திருமணம் செய்யும் போது அவளுக்கு 18 வயது. சரியாக புடவை கூட கட்ட தெரியாது. அந்தளவுக்கு ஒரு வெகுளித்தனமான பெண். நாம் புராண காலத்தில் கண்ணகி, சீதை போன்ற பத்தினி பெண்களை பற்றி படித்து இருப்போம். அகிலாவும் அந்த மாதிரியான பெண் போல இருந்தவள். இந்த யுகத்தில் அவள் பிறந்திருக்க தேவையில்லை. அந்த அளவிற்கு அடக்கம், அமைதி, பொறுமை என பத்தினி பெண்களுக்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டவர்.
அகிலா செய்த பாவம் எனக்கு மனைவியாக அமைந்தது என்று கூறினார்.

பிறகு பாலு மகேந்திரா நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோபா தன்னுடைய 17 வயதிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவருடைய மரணம் குறித்து பாலு மகேந்திரா கூறியது, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை என் மனைவி ஷோபா.
ஆனால், வந்த கொஞ்ச காலங்களிலேயே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அந்த தேவதையைப் பற்றி என்ன சொல்வது? என்ன எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார்.
ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.

ஆனால், பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். மௌனிகா பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவள்.
பாலுமகேந்திரா மெளனிகா பற்றி கூறியது, கடந்த 1998-ஆம் ஆண்டு நாங்களிருவரும் மனப்பூர்வமாக கல்யாணம் செய்து கொண்டோம். மேலும், திருமதி பாலுமகேந்திரா என்று என்னை கூப்பிட்டாங்கனா! அகிலா அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். இதை என்னால புரிஞ்சுக்க முடிகிறது என மௌனிகா கூறினார்.
அந்த அளவிற்கு வெள்ளை மனது உடையவள். மேலும் தன் மூலம் ஒரு குழந்தை பெற்று கொண்டால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்படும் என்ற ஒரே காரணத்துக்காக தாய் ஆகவேண்டும் என்ற ஆசையை கூட தவிர்த்தவள். அந்த அளவிற்கு என் மனைவியையும் என்னையும் நேசித்தவர். அவள் மனைவியாக கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
.