பளபளப்பான கூந்தலுக்கு இதோ நீங்களே வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஹேர்மாஸ்க்!

இந்த எளிதான ஹேர் மாஸ்க் மூலம் பளபளப்பான முடியை பெறுங்கள்!

இந்த எளிதான ஹேர் மாஸ்க் மூலம் பளபளப்பான முடியை பெறுங்கள்!

author-image
WebDesk
New Update
பளபளப்பான கூந்தலுக்கு இதோ நீங்களே வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஹேர்மாஸ்க்!

முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான முடி பராமரிப்பு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒருவர் முதலில் அவர்களின் முடி வகையை அறிந்து, பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், மந்தமான மற்றும் உடையக்கூடிய முடி, பலர் அனுபவிக்கும் பொதுவான முடி பிரச்சனை.

Advertisment

உங்களுக்கும் இதே போன்ற சிக்கல்கள் இருந்தால் மற்றும் பல  குறிப்புகளை முயற்சித்தும் பலனில்லை என்றால், உங்கள் தலைமுடியின் வகையைப் புரிந்துகொண்டு ஒரு நிபுணரை அணுகுவதற்கான நேரம் இது.

ஆனால் எங்கு தொடங்குவது என்பதில் குழப்பமா? தோல் மருத்துவரும், முடி நிபுணருமான மருத்துவர் நிகேதா சோனாவனே, சமீபத்தில் டைப் 2 பி முடிக்கு எளிதான ஹேர் மாஸ்க்கைப் பகிர்ந்துள்ளார், இது வேவி ஹேர் என்று சிறப்பாக விவரிக்கப்படுகிறது. 

2பி வகை முடி உள்ளவர்களுக்கு, ஃப்ரீஸினெஸ் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. வேர்களில் தலைமுடி தட்டையாகவும், நேராகவும் இருக்கும் போது, அது கீழே வேவியாக மற்றும் ஒரு வலுவான 'S' வடிவத்தை உருவாக்குகிறது. உங்களுக்கும் இதேபோன்ற வேவி ஹேர் இருந்தால், மிகவும் தேவையான கவனிப்பை வழங்கக்கூடிய ஹைட்ரேட் ஹேர் மாஸ்க்குகளை முயற்சிக்க வேண்டிய நேரம் இது.

Advertisment
Advertisements

மருத்துவர் சோனாவனே பரிந்துரைத்த ஹேர் பேக் இதோ!

வாழைப்பழ ஹேர் மாஸ்க் சிறந்த,  டைப் 2பி முடிக்கான நீங்களே செய்யக்கூடிய மாஸ்க்குகளில் ஒன்றாகும். இது மந்தமான கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்த மாஸ்க் அனைத்து முடி வகைகளுக்கும் நல்லது.

வாழைப்பழ தேங்காய் ஹேர் மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்பது இங்கே. (Banana Coconut hair mask)

தேவையான பொருட்கள்

1 – பழுத்த வாழைப்பழம்

1 டீஸ்பூன் – தேன்

2 டீஸ்பூன் – தேங்காய் பால் பவுடர்

செய்முறை மற்றும் குறிப்புகள்

* வாழைப்பழம், தேன், தேங்காய் பால் பவுடர் மூன்றையும், ஒரு மிக்சி கிரைண்டரில் போட்டு, மையாக அரைக்கவும்.

* அடுத்து, கலவையை வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.

* சுத்தமான முடியில் அப்ளை செய்யவும்.

* உடல் சூட்டைத் தக்கவைக்க ஷவர் கேப் அணிந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும்.

* இதை வாரத்திற்கு ஒருமுறை செய்யவும்.

நன்மைகள்

* வாழைப்பழம், வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த மூலமாகும். இது முடி அமைப்பை மேம்படுத்துகிறது. முடி மென்மையாகவும், வலுவாகவும் மாறும், இதனால் உடைவது தடுக்கப்படுகிறது.

* தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர். இது உச்சந்தலையை ஆழமாக சுத்தப்படுத்தவும் வேலை செய்கிறது.

* தேங்காய் பால் ஒரு இயற்கை சாஃப்ட்னர். இது உங்கள் தலைமுடியை மென்மையாக்கும் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர். இது தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: