சரிவிகித உணவு மற்றும் அறுசுவை உணவை எடுத்துக்கொள்வது மூளை திறனை வளர்க்க உதவும். மேலும் பழங்கள் தான் மூளை திறனை வளர்க்க மிகச்சிறந்த ஒன்றாகும்.
மூளைக்கு மிக நெருக்கமான பழங்கள் வாழைப்பழம் மற்றும் மாதுளை. சின்ன சோர்வு கவலை இருக்கும்பொது ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். மூளை உற்சாகமாக இருக்க உதவும். மூளையின் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் போது சிரிப்பு, மகிழ்ச்சி இருக்கும்.
வாழைப்பழம்: பெரிய வாழைப்பழம் ஒன்றை நாம் உட்கொள்ளும் பட்சத்தில் மூளையில் இருக்கும் நரம்புகளின் மின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும் மூளை மீட்புக்கான சிறந்த உணவாக வாழைப்பழம் உள்ளது.இது மூளையின் செயல்பாட்டை சரியாக பராமரிக்க உதவுகிறது.
மாதுளை: மெக்னீசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், ஃபோலேட், யாட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இவை நமது மூளையின் நினைவாற்றல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. மாதுளை சாறு நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“