வாழைப் பழம் சேர்த்த குக்கீஸ் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப் பழம்- 3
ஓட்ஸ்- 1/2 கப்
ஒரு சிட்டிகை உப்பு
உலர்ந்த திராட்சை- 1/2 கப்
பட்டை பொடி- 1/4 டீஸ்பூன்
சாக்கோ பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். அத்துடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து ஒரு சிட்டிகை உப்பு, உலந்த திராட்சை சேர்க்கவும். குக்கீஸ் கலவை தயார்.
குக்கீஸ் பேக் செய்ய பேக் ட்ரே எடுத்து அதில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும். பின்னர் கலந்து வைத்துள்ள குக்கீஸ் கலவையை ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்பில் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். சாக்கோ சிப்ஸ் வைக்கவும்.
பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வைத்து பத்து நிமிடங்கள் ஹீட் செய்து பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும். அவ்வளவு தான் வாழைப் பழம் குக்கீஸ் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“