கனிந்த வாழைப் பழம், கோதுமை சேர்த்து சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிறிய வாழைப் பழம் - 6
கோதுமை மாவு- 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் நன்கு கனிந்த வாழைப் பழத்தின் தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப் பழம், கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவை கட்டி வராமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைப் பழம் போண்டா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“