மாலை வேளையில் டீ, காபியுடன் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். பள்ளி முடிந்து வரும் குழந்தைகளும் ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். அந்த வகையில் 10 நிமிடத்தில் செய்ய ஒரு சுவையான ரெசிபி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள்- தேவையான அளவு
வாழைப் பழம்- 2
முட்டை- 1
சர்க்கரை- 4 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 1 கப்
செய்முறை
முதலில் வாழைப் பழங்களை தோல் நீக்கி அதனை வட்ட வடிவங்களாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன்பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் முட்டை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு சர்க்கரை, 5 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 1 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் அதன் மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி விடவும். திருப்பி திருப்பி போட்டு எடுத்து இதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இப்போது பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி எடுத்து அதன் நடுவே சுட்டு எடுத்த வாழைப் பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு தேவையான அளவு பிரட் ரோல் செய்யவும்.
அடுத்ததாக அடுப்பில் தோசை கல் வைத்து அதில் நெய் தடவி வைக்கவும். பிரட் ரோல்களை முட்டை கலவையில் பிரட்டி எடுத்து தோசை கல்லில் வைத்து எடுக்கவும். திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“