வாழைப் பூவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப் பூ வாரத்தில் 2 முறை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும். ரத்த ஓட்டம் சீராகும். பொதுவாகவே வாழைப் பூ வயிற்று. வாய் புண் சரியாக ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இந்த வாழைப் பூ கொண்டு பலவித ரெசிபிக்கள் செய்யலாம். ஆனால் இங்கு புதுவிதமாக இட்லி, தோசைக்கு சைட் டிஷ்-ஆக வைத்து சாப்பிட சுவையான சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப் பூ- 3 கப்
கடலைப் பருப்பு- 3 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு- 3 ஸ்பூன்
தேங்காய்- சிறிதளவு
சின்ன வெங்காயம்- 5 கப்
பூண்டு- 4 பல்
மல்லி விதை-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
புளி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
வரமிளகாய்- 6
எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைப் பூவை எப்போதும் போல் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தலா 3 ஸ்பூன் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் போது மிளகாய் வத்தல், 1 ஸ்பூன் மல்லி விதை மற்றும் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த பொருட்களை வறுத்து எடுத்து 1 தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். இப்போது அதே கடாயில் சுத்தம் செய்து நறுக்கி வைத்த வாழைப்பூவை சேர்த்து கொள்ள வேண்டும். 200 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயமும் வாழைப்பூவும் நன்றாக வதங்கி சிவக்க ஆரம்பிக்கம் போதும் கொஞ்சம் தேங்காய் துருவலையும் சேர்தது வதக்க வேண்டும். பின்னர் புளி சேர்த்து வதக்கி இறக்கவும். இந்த கலவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
அடுத்ததாக, கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து தாளிக்கலாம். பின்னர் 5 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக சிவக்க வதக்கவும். கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான, சிம்பிளான வாழைப் பூ சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“