இரண்டே நிமிஷத்துல முழு வாழைப்பூவை கிளீன் பண்ணலாம்: எப்படின்னு பாருங்க
வாழைப்பூவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. சரியான முறையில் செய்தால், அது மிகவும் எளிது. வாழைப்பூவை சுத்தம் செய்யப் போகும் முன், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால், கருமை படியாமல் தவிர்க்கலாம்.
வாழைப்பூவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. சரியான முறையில் செய்தால், அது மிகவும் எளிது. வாழைப்பூவை சுத்தம் செய்யப் போகும் முன், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால், கருமை படியாமல் தவிர்க்கலாம்.
வாழைப்பூவின் மருத்துவக் குணங்கள் அனைவரும் அறிந்ததே. வாழைப்பூவை வாங்கியவுடன் சில நாட்களில் கருமை அடைந்து விடுவதாலும், அதை சுத்தம் செய்ய அதிக நேரம் எடுப்பதாலும் பலர் வாழைப்பூ சமையலைத் தவிர்த்து விடுகின்றனர்.
Advertisment
ஆனால் மிக எளிமையான சில டிப்ஸ்கள் மூலம், வாழைப்பூவை சில நிமிடங்களிலேயே சுத்தப்படுத்தி விடலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் நீங்கள் அடிக்கடி வாழைப்பூவை சமையலில் சேர்த்துக்கொள்வீர்கள்.
வாழைப்பூவை எளிதாக சுத்தம் செய்வது எப்படி?
Advertisment
Advertisements
வாழைப்பூவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. சரியான முறையில் செய்தால், அது மிகவும் எளிது. வாழைப்பூவை சுத்தம் செய்யப் போகும் முன், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால், கருமை படியாமல் தவிர்க்கலாம்.
வாழைப்பூவின் மேல் மடல்களை முதலில் பிரிக்கவும். இது பிரிப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். மடல்களை அகற்றும் போது, பூக்களை தனித்தனியாகப் பிரிப்பதற்குப் பதிலாக, கத்தியைப் பயன்படுத்தி காம்புடன் சேர்த்து வெட்டி எடுக்கவும். இப்படிச் செய்வதால் வெட்டுவதும், சுத்தம் செய்வதும் எளிதாகும்.
ஆரம்பத்தில் மடல்களை எடுப்பது எளிதாக இருக்கும். அதன் பிறகு சற்று கடினமாகலாம். அப்போது வாழைப்பூவை தலைகீழாகக் கவிழ்த்துப் பிடித்து உரித்தால், மடல்கள் எளிதாக வந்துவிடும். முன்னரே செய்தது போல, காம்புடன் சேர்த்து வெட்டி எடுத்துக்கொள்ளவும். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு மடல்களுடன் கூடிய பூக்களை வெட்டி எடுக்கவும்.
சிறிதான பூக்கள் வந்த பிறகு, வாழைத்தண்டில் உள்ள நரம்புகளை நீக்க முடியாது. அப்போது, வாழைப்பூவின் அடிப்பாகத்தில் பாதியாக ஒரு கோடு போட்டு, சுற்றிலும் வெட்டி எடுக்கவும். இப்படிச் செய்வதால், மேல் மடல்கள் எளிதாகப் பிரிந்து வந்துவிடும்.
வாழைப்பூவின் கீழ் உள்ள சின்ன குங்குமப் பூ போன்ற பகுதியை கட் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இந்தக் பகுதியை எறிந்து விடவே கூடாது. இது புற்றுநோயைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது. இதை பச்சையாகவும் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், சமைத்தும் சாப்பிடலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். மோர் அல்லது கலநீர் இல்லாத நிலையில், இந்த உப்பு நீரில் நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு வைத்தால், அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
மேல் பகுதியை வெட்டி எடுத்த பிறகு, வாழைப்பூவை இரண்டாக வெட்டவும். நடுவில் ஒரு தண்டு தெரியும். அதுதான் வாழைப்பூவின் காம்பு. அது நமக்குத் தேவையில்லை. அதை நீக்கினால், சுற்றியுள்ள பூக்கள் தனியாகக் கிடைக்கும். அவற்றைப் பொடியாக நறுக்கி உப்பு நீரில் சேர்க்கவும்.
மடல்களாக வெட்டி எடுத்த பூக்களை சுத்தம் செய்ய, நுனிப்பகுதியை கைகளால் லேசாகத் தேய்க்கவும். அப்போது நரம்பு தெளிவாகத் தெரியும். ஒரு கத்தியைப் பயன்படுத்தி நரம்பை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, பூவை இடது பக்கம் இழுத்தால், காம்பு தனியாக எளிதாக வந்துவிடும். இப்படிச் சுத்தம் செய்தால், ஒவ்வொரு பூவையும் தனித்தனியாக சுத்தம் செய்யத் தேவையில்லை.
பூவின் பின்பக்கம் உள்ள மெழுகு போன்ற வயிற்றுப்பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். இதைச் சுத்தம் செய்யாவிட்டால் வயிற்று வலி வரலாம். பின்பகுதியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, கத்தியால் லேசாக இழுத்தால், அந்தப் பகுதியும் எளிதாக நீங்கிவிடும். ஒரு நிமிடத்திற்குள் வாழைப்பூவை முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுக்கு அடுக்காக இருப்பதால், நறுக்குவது எளிதாக இருக்கும். சீராக சிறிய துண்டுகளாக வெட்டி, உடனடியாக உப்பு நீரில் சேர்க்கவும். அப்போதுதான் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, வாழைப்பூவை நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாகப் பாதுகாக்கலாம், மேலும் எளிதாக சுத்தம் செய்து ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாம்.