நீரேற்றம் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்ற வாழைப்பழம், பளபளப்பான முடிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஏ, சி, பி போன்ற வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன, இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உச்சந்தலையையும் மேம்படுத்துகிறது, என்று டாக்டர் ரிங்கி கபூர் கூறினார். (consultant dermatologist, cosmetic dermatologist and dermato-surgeon, The Esthetic Clinics)
பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, ஹேர் ஃபாலிக்கிள்ஸுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது, என்று உணவியல் நிபுணர் சிம்ரத் புய் கூறினார். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவும்.
உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வீட்டில் நீங்களே செய்யக்கூடிய வாழைப்பழ ஹேர் மாஸ்க் இங்கே
அவகேடோ, வாழைப்பழம்
அவகேடோ பழத்தில் பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிரம்பியுள்ளன, அவை முடி இழைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
பழுத்த வாழைப் பழம் மற்றும் அவகேடோவை சம அளவில் பிசைந்து, உச்சந்தலையில் தடவவும்.
அதை 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வலுவான கூந்தலுக்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று டாக்டர் கபூர் பகிர்ந்து கொண்டார்.
வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
/indian-express-tamil/media/media_files/YQt1REXYFzk0BNs5BOdL.jpg)
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துவதற்கு அறியப்பட்ட வாழைப்பழத்துடன் இணையும் போது, அது அதிசயங்களைச் செய்கிறது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். கிட்டத்தட்ட 30 முதல் 40 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பின்னர் கழுவவும். இது உங்கள் தலைமுடியை நீரேற்றமாகவும், மிருதுவாகவும் மாற்றும்.
வாழைப்பழம் கூந்தலுக்கு, இயற்கையான பளபளப்பைத் தருவதோடு, ஈரப்பதத்தையும் அளித்தாலும், மக்கள் அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்திய பிறகு, மக்கள் தங்கள் தலைமுடியை சரியாகக் கழுவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் மீதமுள்ள எச்சம், எரிச்சலை ஏற்படுத்தலாம், மேலும் உங்கள் பொடுகை மோசமாக்கும்.
இந்த ஹேர் மாஸ்க்குகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், உங்கள் முனைகள் உடையக்கூடியதாக இருக்கும், இதன் விளைவாக முனைகள் பிளந்து முடி சேதமடையும். ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் மற்றும் முடி சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை அணுகவும், என்று டாக்டர் கபூர் வலியுறுத்தினார்.
Read in English: Hydrating and moisturising, this fruit is the ‘best choice for shiny hair’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“