தலைமுடி ஷைனிங்கா இருக்கும்; பனானா ஹேர் மாஸ்க் இப்படி பண்ணுங்க: நடிகை ரேகா
நன்கு பழுத்த வாழைப்பழங்களைக் கொண்டு ஈஸியான ஹேர் மாஸ்க் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என நடிகை ரேகா தெரிவித்துள்ளார். இதை பயன்படுத்துவதன் மூலம் முடி ஷைனிங்காக இருக்கும்.
நம் முடியை பார்ப்பதற்கு ஷைனிங்காகவும், உறுதியாகவும் வளர்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இதற்காக பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என சிலர் நினைப்பார்கள். மேலும், சிலர் விலை அதிகமான ஷாம்பு அல்லது ஹேர் சீரம் பயன்படுத்த வேண்டும் என கருதுவார்கள்.
Advertisment
இப்படி வாங்கும் பொருட்களில் இரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் அதில் இருந்து ஏதேனும் ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்னும் தயக்கம் பலருக்கு இருக்கும். இதனடிப்படையில், நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் மூலம் தலை முடியை ஷைனிங்காக மாற்றும் டிப்ஸை நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நன்றாக பழுத்த வாழைப்பழங்களை மிக்ஸியில் போட்டு அத்துடன் இரண்டு முட்டைகள் மற்றும் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவை சேர்த்து அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடியை ஷைனிங்காக மாற்றும் ஹேர் மாஸ்க் ரெடியாகி விடும்.
இந்த ஹேர் மாஸ்கை தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் தலை முடி உறுதியாகவும், ஷைனிங்காகவும் இருக்கும் என ரேகா தெரிவித்துள்ளார். முடியின் வளர்ச்சியை தூண்டக் கூடிய புரதச் சத்து முட்டையில் ஏராளமாக இருக்கிறது. இதனால், முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும்.
Advertisment
Advertisements
மேலும், இதில் இராசயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லை.
நன்றி - Rekha's Diary Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.