Advertisment

பட்டுப் போன்ற கூந்தலுக்கு ’வாழைப்பழ தேன்’ ஹேர் மாஸ்க்!

தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் கூந்தலை மிருதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy Life, Hair fall problem, honey hair mask

Hair Mask: அதிக வெயிலின் தாக்கம் காரணமாக கூந்தல் மற்றும் சரும பாதிப்புக்களைச் சந்திக்கின்றது. வெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, இரசாயண பயன்பாடுகளாலும் கூந்தல் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படுகின்றது. எனவே உங்களுடைய கூந்தல் வறண்டு, பொலிவிழந்து காணப்படுகிறதே என்று கவலை கொள்ளாதீர்கள், உங்களுக்காக ஹெல்தி ஹேர் மாஸ்க்கை குறிப்பிடுகிறோம்.

Advertisment

உங்கள் கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை உங்கள் சமையலறையிலேயே பெற்றுக் கொள்ளலாம். தேன், தயிர் மற்றும் வாழைப்பழம், கொண்டு கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். இவற்றில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

கூந்தலின் நீளத்தை தயிர் மற்றும் வாழைப்பழம் அதிகரிக்கிறது. தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் கூந்தலை மிருதுவாகும். ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் வாழைப்பழத்தில் இருப்பதால் கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும். இவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

தயிர் – 2-3 தேக்கரண்டி

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை

வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அதனை நன்கு மசித்து கொள்ளவும். பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

இவ்வாறு அரைத்து எடுத்த விழுதை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கூந்தலை அலசி விடவும்.

இந்த ஹேர் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால் கூந்தலுக்கு தேவையான சத்துடக்கள் கிடைக்கும். மேலும் கூந்தல் பட்டு போல மின்னும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment