Advertisment

வாழைப் பழம், கோதுமை மாவு; குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம்

வாழை வால்நட் மஃபின்கள் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Diabetic Health Recipe Dates Muffins
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாழைப் பழம், கோதுமை மாவு சேர்த்த சுவையான  மஃபின்கள் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு – 1 கப்

சர்க்கரை – அரை  கப்

சமையல் சோடா – அரை டீஸ்பூன் 

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன் 

பழுத்த வாழைப் பழம் – 1 கப் 

எண்ணெய் – அரை கப் 

வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

அக்ரூட் பருப்புகள் – அரை  கப் 

செய்முறை 

மைக்ரோவேவ் அடுப்பை 190 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வாழைப் பழங்களை மசித்து அதில் சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்து வாழைப் பழ கலவையில் சேர்க்கவும். அதன் உடன்  வால்நட்ஸை சேர்க்கவும். கப்கேக் மோல்களில் வெண்ணை தடவி அதில் கேக் மாவினை முக்கால் பாகம் வரை நிரப்பவும். அவற்றின் மேல் சில வால்நட் துண்டுகள் போடவும். இதை 30 முதல் 35 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் பேக்கிங் மோடில் வைக்கவும். 

30 நிமிடம் கழித்து டூத் பிக் எடுத்து கேக்கினுள் செலுத்தினால் மாவு ஒட்டாமல் வரவேண்டும். அதுதான் சரியான பதம். அப்படி இல்லை என்றால் மேலும் ஒரு 5 நிமிடம் ஓவனில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் பின்னர் எடுத்தால் சுவையான வாழை சேர்த்த வால்நட் மஃபின்கள் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment