விநாயகர் சதுர்த்தி நாளை(செப்.18) 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த இனிய நாளில் இனிப்பு செய்து மகிழ்வோம். சுவையான வாழைப்பழப் பாயசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழுத்த பூவன் வாழைப்பழம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 1/4 கப்
மில்க் மெய்ட் – 1/4 கப்,
ஏலக்காய்த் தூள் – 1/4 ஸ்பூன்
செய்முறை
வாழைப் பழத்தை முதலில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாலை வைத்து நன்றாக காய்ச்சவும். அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப் பழம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். இவை வெந்து வந்ததும் ஏலக்காய்த் தூள், மில்க் மெய்ட் சேர்த்து இறக்கவும். வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பவர்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் சுவையாக இருக்கும். அவ்வளவு தான் சிம்பிள் வாழைப்பழப் பாயசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“