உலகிலே இந்த நாட்டு மக்களின் 'பற்கள்' மட்டும் தான் பளீச்... அதுக்கு அவங்க யூஸ் பண்ணுறது என்ன தெரியுமா?

உங்களது பற்கள் மஞ்சள் நிறமாகவும், கறையாகவும் இருந்தால் அவற்றை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

உங்களது பற்கள் மஞ்சள் நிறமாகவும், கறையாகவும் இருந்தால் அவற்றை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

author-image
Mona Pachake
New Update
istockphoto-1361598488-612x612 (1)

பற்கள் என்பது நம் முகத்தின் அழகையும், நம் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். பற்கள் சுத்தமாகவும், பளபளப்பாகவும் வெண்மையாக இருந்தால், நம் முகம் பிரகாசமாக தோன்றும். இதனால் நம்மில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், சில நேரங்களில் பற்கள் மஞ்சள் நிறமடைந்து காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணங்களில், பற்களை தினசரி சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, அதிக அளவில் டீ, காபி போன்ற கஃபீன் அடங்கிய பானங்களை குடிப்பது, புகையிலை, சிகரெட் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவது, மற்றும் வயதுக்கேற்ப பற்களின் இயற்கையான நிறம் மங்குவது போன்றவை அடங்கும்.

Advertisment

istockphoto-1002774750-612x612

மஞ்சள் நிறத்தை போக்க வாழைப்பழம் 

இத்தகைய பற்கள் மஞ்சள் நிறமடைந்து விட்டாலும், அவற்றை மீண்டும் வெண்மையாகவும், பளிச்சென்ற தோற்றத்துடன் மாற்றும் விதத்தில், எளிய மற்றும் இயற்கையான சில உத்திகள் வீட்டிலேயே பின்பற்ற முடியும். அவற்றில் ஒன்றாக வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாகும். பலர் பழத்தை சாப்பிட்ட பின் தோலை வீணாக போடுகிறார்கள். ஆனால், உண்மையில் வாழைப்பழத் தோலில், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் மாங்கனீசு போன்ற பல பயனுள்ள தாதுக்கள் அடங்கியுள்ளன. இவை பற்களின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் அடுக்கை மெதுவாக அகற்றி, பற்களுக்கு இயற்கையான வெண்மை மற்றும் பிரகாசத்தை வழங்கும்.

Banana peels

மேலும் சிறந்த பலனைப் பெற விரும்பினால், வெறும் வாழைப்பழத் தோலை மட்டும் அல்லாமல், அதனுடன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா ஒரு இயற்கையான ஸ்கிரப்பராக செயல்படுகிறது. இது பற்களில் இருக்கும் நிலைத்திருக்கும் கறைகளை நசுக்கி அகற்றும். அதே நேரத்தில், இதில் உள்ள அல்கலைன் தன்மை, பற்களின் மேற்பரப்பில் உள்ள அமிலத் தாக்கத்தை சமநிலைப்படுத்தி, மஞ்சள் நிறத்தை குறைக்கும் பணியை செய்கிறது.

இதை எப்படி பயன்படுத்துவது?

முதலில் வாழைப்பழ தோலை எடுத்து அதில் உள்ள அந்த மாவு போல இருக்கும் அதை சுரண்டி எடுத்து அதனுடன் கொஞ்சம் பேக்கிங் சோடா எடுத்து கலந்து அதை ஒரு ப்ருஷ் பயன்படுத்தி உங்கள் பல்லில் நன்கு தேய்த்து அதன் பிறகு வாயை கழுவி நார்மலாக ப்ருஷ் செய்து விட வேண்டும். சூடான் நாட்டு மக்களுக்கு தான் பற்கள் மிகவும் வெள்ளையாக இருக்குமாம். அவர்கள் இந்த ட்ரிக் தான் பயன்படுத்துவார்களாம். 

Advertisment
Advertisements

baking soda

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை முயற்சி செய்து வரும்போது, பற்கள் மெதுவாகவேனும் வெண்மையடையும். அதனுடன், தினசரி பல் சுத்தம், சரியான உணவுமுறை மற்றும் தவறான பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது என்பவை இணைந்து, பற்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவும். எனவே விலையுயர்ந்த பல் வெண்மை சிகிச்சைகளை நாடாமல், வீட்டிலேயே இந்த இயற்கையான வழிகளை பின்பற்றலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: