சமைக்கவே வேண்டாம்… ஆனால் சூப்பரான காலை உணவு!

Banana Aval Recipe Making Tamil Video: பேச்சலர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது வரப்பிரசாதம்! தயாரித்து, உண்டு மகிழுங்கள்.

Banana Recipe Tamil News, Banana Aval Recipe Making Tamil Video: அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். சமைக்க நேரமில்லை. சமைக்காமல் வீட்டு உணவு… அதுவும் சத்தான சுவையான உணவு தேவை. என்ன செய்வது?

கவலைப்படாதீர்கள்! உங்கள் குறையை போக்க வல்லது, அவல்! உடல் குளிர்ச்சியை தரக்கூடிய அவலை காலை உணவாக எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். சமைக்காமல், நிமிடத்தில் அவல்- வாழைப்பழம் கீர் செய்து சாப்பிடலாம்.

Banana Aval Recipe Making Tamil Video: அவல் – வாழைப்பழம் கீர்

அவல் – வாழைப்பழம் கீர் செய்யத் தேவையான பொருட்கள்: அவல் – 1 கப், வாழைப்பழம் – 2, வெல்லம் – 1 ஸ்பூன், பால் – 1/2 கப், நட்ஸ்- உலர் பழங்கள் – கையளவு

செய்முறை :

வாழைப்பழத்தை நறுக்கி கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் வெல்லத்தை தூளாக்கி தூவுங்கள். பிறகு ஸ்பூன் வைத்து வாழைப்பழத்தை குழைய மசித்துக்கொள்ளுங்கள். இதனுடன் அவலை சேருங்கள். அடுத்து நட்ஸ்- உலந்த பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கலவையுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கலக்குங்கள். இப்போது சுவையான- சத்தான அவல்- வாழைப்பழம் கீர் ரெடி!

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உணவாக எடுத்துக்கொள்ள உகந்தது இது. தனியாக இருக்கும் பேச்சலர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது வரப்பிரசாதம்! தயாரித்து, உண்டு மகிழுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Banana recipe tamil news banana aval recipe making tamil video

Next Story
சின்னத்திரை மூலம் கிடைத்த நிகழ்ச்சி… டாக்டர் பட்டம் புகழ்! பிக் பாஸ் வேல்முருகன் ஷேரிங்bigg boss velmurugan bigg boss tamil singer velmurugan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com