மொறு மொறுன்னு வாழைக்காய் பொரியல்: டேஸ்டி ப்ளஸ் ஹெல்தி ரெசிபி

Vazhakkai Poriyal In Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி?

By: Updated: November 21, 2020, 07:41:34 AM

Banana Recipes, Banana Fry Tamil Video: வாழைக்காய் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒரு காய்கறி ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுகிறது. எனவே மலச்சிக்கலுக்கு வாழைக்காய் உணவு அருமையான தீர்வு. மேலும் குடல்களை இது சுத்தப்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோயை தடுக்கும் வல்லமை மிக்கது. இன்னும் இதன் பலன்களை கூறிக்கொண்டே போகலாம்.

வாழைக்காயை பல வடிவங்களில் உணவில் சேர்த்து சாப்பிட முடியும் என்றாலும், பொரியல் அனைவருக்கும் பிடித்தமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

Banana Fry Tamil Video: வாழைக்காய் பொரியல்

வாழைக்காய் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 2, தனியா – 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி, தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி, கடுகு – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையானஅளவு, கருவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப

வாழைக்காய் பொரியல் செய்முறை :

ஒரு வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு அவற்றை பொடியாக்க வேண்டும். வாழைக்காயை நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளியுங்கள். அதனுடன் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து கடலைப்பருப்பு பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Banana recipes banana fry tamil video vazhakkai poriyal in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X