ஆரோக்கியம், சுவை நிறைந்த வாழைத் தண்டு தோசை எளிதாக செய்யலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
முழு உளுந்து – ¼ கப்
நறுக்கிய வாழைத் தண்டு – 2 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து இதை மிக்ஸி, கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கின வாழைத் தண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். மாவு பதத்திற்கு வரும். இதில் சீரகம் சேர்த்து 7 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள் காலையில் தோசை சுட சூப்பராக இருக்கும். சுவையான, சத்து நிறைந்த வாழைத் தண்டு தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“