வளையல் அணிவதோ அல்லது மோதிரம் அணிவதோ நமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், சில சமயங்களில் அவை கைகளில் இறுக்கமாக மாட்டிக்கொண்டு கழற்றுவதற்கு பெரும்பாடாக இருக்கும். எண்ணெய், சோப்பு போன்றவற்றை பயன்படுத்தி கழற்ற முயற்சிக்கும் போது கை வலிப்பதோடு, அந்த இடமும் கருத்துப் போக வாய்ப்புள்ளது.
Advertisment
எவ்வளவு இறுக்கமான வளையலாக இருந்தாலும், கைக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல், மிக எளிமையான முறையில் எப்படி கழற்றுவது என்று பார்க்கலாம்.
முதலில் பாலித்தீன் பையை சுருட்டி, வளையல் இருக்கும் கையின் அடி பாகத்தில், அதாவது வளையலுக்கு அடியில், முழுவதுமாக நுழைத்து விடவும். கை முழுவதும் அந்த கவர் உள்ளே இருக்க வேண்டும். இப்போது வளையலை பையின் மீது வைத்து, பையின் மறுமுனையை மேலே இழுக்கவும். வளையல் பையை ஒட்டி வெளியே வரும்.
அவ்வளவுதான்! சுத்தமாக கை வலிக்காமல், வளையல் எளிதாக வெளியே வந்துவிடும். இந்த முறைப்படி கழற்றும் போது வளையல் நெளியாது, கையும் வலிக்காது.
Advertisment
Advertisements
மோதிரம் கழற்றுவது எப்படி?
மோதிரமும் சில சமயங்களில் விரலில் இறுக்கமாக மாட்டிவிடும். உள்ளே சென்ற பின் தெரியாது, ஆனால் போடுவதும் கழற்றுவதும் கடினமாக இருக்கும். இறுக்கமான மோதிரத்தை கை படாமல், சுலபமாக கழற்றுவதற்கு ஒரு அருமையான வழி உள்ளது.
த்ரெட்டிங் நூல் அல்லது சற்று கெட்டியான நூலின் ஒரு முனையை மோதிரத்திற்கு அடியில், விரலின் மறுபுறமாக வெளியே எடுத்துக் கொள்ளவும். வெளியே எடுத்த நூலின் ஒரு முனையை கட்டை விரலில் நன்றாக சுற்றிக் கொள்ளவும்.
இப்போது, மோதிரம் மாட்டி இருக்கும் விரல் மீது, நூலை ஸ்பைரல் வடிவில் (சுருள் போல) இறுக்கமாக சுற்றவும். மோதிரம் இருக்கும் இடத்தில் இருந்து விரலின் நுனி வரை நூலால் சுற்ற வேண்டும்.
நூலால் சுற்றிய பிறகு, கட்டை விரலில் சுற்றியிருந்த நூலை மெதுவாக இழுக்கவும். மோதிரம் நூலுடன் சேர்ந்து மெதுவாக வெளியே வரும்.
இந்த எளிய முறைகளைப் பயன்படுத்தி, இனி இறுக்கமான வளையல் மற்றும் மோதிரங்களைக் கழற்றுவது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. கை வலி, காயம், அல்லது நகைகள் கருத்துப் போவது போன்ற பிரச்சனைகள் இனி இல்லை!