சர்க்கரை வியாதியை சாதாரணமா நினைக்காதீங்க… கிட்னிக்கு ஆபத்து; சொந்த வேதனையை பகிர்ந்த வங்கி மேனேஜர்

நீரிழிவு நோயை அலட்சியப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஜம்முவில் உள்ள வங்கி மேலாளர் ரவீந்தர் சஸ் கதை சிறந்த உதாரணமாகும். மேலும், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் 40% பேர் தங்கள் நிலை குறித்து அறியாமலேயே உள்ளனர் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

நீரிழிவு நோயை அலட்சியப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஜம்முவில் உள்ள வங்கி மேலாளர் ரவீந்தர் சஸ் கதை சிறந்த உதாரணமாகும். மேலும், இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் 40% பேர் தங்கள் நிலை குறித்து அறியாமலேயே உள்ளனர் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Banker had blood sugar

நீரிழிவு நோயை அலட்சியப்படுத்தினால் என்ன ஆகும்? வங்கி மேலாளரின் அனுபவம்

ஜம்முவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் பணிபுரிந்து வந்த ரவீந்தர் சஸ், தனது 40களின் தொடக்கத்தில் அடிக்கடி மயக்கம், பார்வை மங்குதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது. விளையாட்டு வீரராக இருந்ததாலும், குடும்பத்தில் யாருக்கும் நீரிழிவு நோய் இல்லாததாலும், உடற்பயிற்சி, உணவில் சர்க்கரையைக் குறைத்தல் மற்றும் பாகற்காய் ஜூஸ் போன்ற மூலிகை பானங்கள் மூலம் தனது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். அதன்பிறகு அவர் மருத்துவ ஆலோசனைகளையும், மருந்தையும் புறக்கணித்தார்.

Advertisment

20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் அவருக்கு திடீரென கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. “எனது நிலையை அலட்சியப்படுத்தியது மிகப்பெரிய தவறு” என்று சொல்லும் ரவீந்தர் சஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றிக்கொண்டார். மாற்று உறுப்பு பெற்றவர்களுக்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். “அப்போதே நான் ஒழுக்கமாக இருந்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்காது” என்கிறார்.

நீரிழிவு நோயும் அதன் ஆபத்துகளும்:

நீண்ட காலமாக கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உடல் உறுப்புகளையும், அமைப்புகளையும் கடுமையாகப் பாதித்து, பல சிக்கல்களை ஏற்படுத்தும். இது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் பாதப் பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும்.

‘தி லான்செட் குளோபல் ஹெல்த்’ (The Lancet Global Health) இதழில் வெளியான சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் 5-ல் 2 பேர் (40%) தங்கள் நிலை குறித்து அறியாமல் உள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐவரில் ஒருவருக்கு (5.4 கோடி பேர்) நீரிழிவு நோய் உள்ளது. "பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு மட்டுமே தங்கள் நிலை பற்றித் தெரிந்துள்ளது. அதிலும் மிகக் குறைவானவர்களே ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் டி.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

புனேவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் மூத்த சிறுநீரக நிபுணர் டாக்டர் தருண் ஜெலோகா கூறுகையில், "நீரிழிவு நோய் என்பது சிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணம்" என்று ரவீந்தர் சஸ்-ஐப் போல் பலர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகும், ரவீந்தர் சஸ் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தினார். "நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும், மாநிலளவிலான டேபிள் டென்னிஸ் வீரராகவும் இருந்தேன். குடும்பத்தில் யாருக்கும் நீரிழிவு நோய் இல்லாததால், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தேன். உணவிலிருந்து சர்க்கரையை நீக்கினேன். ஆனால், மருத்துவரின் ஆலோசனைகள் மற்றும் சோதனைகளை அலட்சியப்படுத்தினேன்” என்கிறார் அவர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

வங்கி மேலாளர் ஆன பிறகு, வேலைப்பளு காரணமாக நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றியதால் உடல் செயல்பாடு குறைந்தது. சஸ்-ன் எடை 85 கிலோவாக உயர்ந்தது. அப்போதும் அவர் தன்னை பரிசோதித்துக்கொள்ளவில்லை. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில், பாகற்காய் ஜூஸ் மற்றும் வெந்தயப் பொடியை உணவில் சேர்த்துக்கொண்டார். "நான் இங்கும் அங்கும் நடந்தேன். ஆனால் பெரியளவில் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யவில்லை. அதோடு, நான் சங்கிலித் தொடர் புகைப்பிடிப்பவன்" என்கிறார் சஸ்.

புகைப்பிடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 30-40% அதிகம் என்று டாக்டர் ஜெலோகா குறிப்பிடுகிறார். புகைப்பிடித்தல், உடலின் இன்சுலின் பயன்பாட்டில் தலையிடுகிறது, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இது வயிற்றுப் பகுதியில் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் புகைப்பிடித்தால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். அது நரம்பு பாதிப்பு, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் கண் பிரச்சினைகளை மோசமாக்கும்.

2016-ல் ஓய்வுபெற்ற சஸ், புனேவில் தனது மகனுடன் வசிக்கச் சென்றார். வழக்கமான பரிசோதனையில், ரத்த சர்க்கரை அளவு உயர்ந்திருப்பதை மீண்டும் கண்டார். மற்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகள் இல்லாததால், இதையும் அவர் அலட்சியப்படுத்தினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு, 2018-ல், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார். பரிசோதனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் சேதமடைந்தது தெரியவந்தது. “அப்போது எனக்கு 62 வயது. ஓய்வுபெற்ற வாழ்க்கையை அனுபவிக்கத் தயாராக இருந்தேன். சாதாரண கிரியேட்டினின் அளவு 0.7 முதல் 1.3 mg/dL வரை இருக்கும். ஆனால் எனக்கு 8 ஆக உயர்ந்திருந்தது. இது கடுமையான சிறுநீரக செயலிழப்பைக் குறிக்கிறது” என்று அவர் நினைவுகூறுகிறார்.

அதற்குப் பிறகு, அவர் நீண்டகால டயாலிசிஸ் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். இறுதியாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். அவரது மனைவி அஞ்சலி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். ஆனால் இருவரின் ரத்த வகையும் பொருந்தவில்லை. இருந்தாலும், டாக்டர் ஜெலோகா ரத்த வகை பொருந்தாத மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். “இந்த அறுவை சிகிச்சையில் ஆபத்து அதிகம் என்றாலும், 95-96% வெற்றி விகிதம் உள்ளது” என்று டாக்டர் ஜெலோகா கூறுகிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சஸ்-க்கு 40 தையல்கள் போடப்பட்டன. தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டார். மாற்று உறுப்புக்குப் பின் ஏற்படும் நீரிழிவைக் கட்டுப்படுத்த தினமும் நான்கு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டார். “சுமார் 20% மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது” என்று டாக்டர் ஜெலோகா குறிப்பிடுகிறார்.

நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உள்ள சவால்கள், வழக்கமான கண்காணிப்பு, தொடர்ச்சியான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆகும். குணமடைந்த பிறகு, ரவீந்தர் சஸ் மும்பையைச் சேர்ந்த ‘நர்மதா கிட்னி ஃபவுண்டேஷன்’ நடத்திய தேசிய மாற்று உறுப்பு விளையாட்டுப் போட்டிகள் (National Transplant Games) குறித்த விளம்பரத்தைப் பார்த்தார். “அது எனது விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன்” என்கிறார். மேலும், அவர் ‘ப்ளூ சர்க்கிள் டயாபெட்டீஸ் ஃபவுண்டேஷன்’ (Blue Circle Diabetes Foundation) உடன் இணைந்து விழிப்புணர்வுப் பேச்சுகளிலும் பங்கேற்று வருகிறார்.

“நான் செய்த அதே தவறை வேறு யாரும் செய்யக் கூடாது என்பதற்காக, எனது கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று சஸ் கூறுகிறார். தனது வாழ்க்கை அனுபவம், நீரிழிவை அலட்சியப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதையும், அதை ஒழுக்கத்துடன் கையாண்டால் எப்படி ஒரு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும் என்பதையும் உணர்த்துகிறது. கோவிட்-19-ஆல் 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் மீண்டு வந்தார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: