ஒரு முறை வாழைப்பழ பன். இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 பழுத்த பழம்
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
கால் டீஸ்பூன் சோடா உப்பு
1 கப் மைதா
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பழத்தை சேர்க்கவும். நன்றாக நசுக்கவும். அதில் சர்க்கரை சேர்க்கவும், தொடர்ந்து சோடா உப்பு சேர்த்து கிளரவும்.தொடர்ந்து அதில் மைதா மாவு சேர்த்து, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். சப்பாத்தில் கல்லில், வட்டமாக தடிமனாக தேய்க்கவும். தற்போது, இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும். சூப்பரான வாழைப்பழ பன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“